Friday, May 15, 2015

தமிழ் இனி மெல்லச் சாகும்

அடிக்கடி பிறந்த பொன் நாட்டிற்க்கு போய் வந்ததில் ஒரு விஷயம் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. தமிழ்  கூறும் நல்லுலகில் தமிழ் மொழி ஆளுமை மிகவும் குறுகித்தான் போய் விட்டது.

திரைப்படமோ, சமையலோ, கிரிக்கெட் மாட்சோ - சிலாகிக்கும் அளவு இருந்தால்,    'சூப்பர் ', 'awesome ', 'சான்சே இல்ல'   என்கிற மூன்றே மூன்று வார்த்தைகளுக்குள் அடக்கி விடுகிறார்கள். அதுவே மோசமாக இருந்தால் இன்னுமே சிக்கனம்- 'ஒரே மொக்க'  இரத்தின சுருக்கமாக முடித்து விடுவார்கள். ஒரு வேளை சுருங்கச் சொல்லி விளக்குதல் என்பது இதுதானோ? இரண்டும் கெட்டான் லட்சணமாய் 'கலக்குப்ஹை ' சொதப்புப்ஹை' என்று கலப்படம் வேறு. பாதி தமிழருக்கு 'ழ' என்கிற உச்சரிப்பே அந்நியமாய் போய் விட்டது. 'தமிழ்' என்பதே 'தமிளு ' என்று மருவி விட்டது. நடை முறையில் 'நல்ல' என்பது 'நள்ள ' என்றுதான் செவியில் விழுகிறது. கம்பன், வள்ளுவன்,இளங்கோ,பாரதி என்றொரு வரிசையை கரைத்து குடிக்க வேண்டாம். பேச்சுத் தமிழாகவே இருக்கட்டும், உருப்படியாக இருக்கிறதா என்றால், இல்லை என்றுதான்  சொல்ல வேண்டி இருக்கிறது. 'எங்கெங்கு காணினும் சக்தியடா ' என்றது போல் 'சப்ப மாட்டரு ', ரவுசு தாங்கல', கணக்கு பண்றான்',கடலை போடறான் என்பதாய் கொச்சைப்  பிரயோகங்கள்தான் கோலோச்சுகின்றன.

தாய் மொழியின் மேலான பற்றை, ஈடுபாட்டை,ஆளுமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு போய் சேர்க்காதது யார் குற்றம்? வீடும், வண்டியும், வங்கியில் பணமும் சேர்ப்பதற்கு ஏதுவான படிப்புதான் முக்கியம்- தமிழாவது தாய் மொழியாவது? குண்டு சட்டியில குதிரை ஓட்டப் போகிறாயா? பேசாம ஹிந்தி எடுத்துக்கோ, நார்த்ல போஸ்டிங் வந்தாலும் கஷ்டம் இல்ல...தர்ட் லாங்குவெஜ் பிரெஞ்ச் இல்ல ஜெர்மன் படி, ஏன்னா ஒரு foreign language கத்துக்கறது நல்லது ...இந்த நிலைமை உருவாக யார் காரணம்? பள்ளிகளில் ஆங்கிலம், கணக்கு, விஞ்ஞானம் கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கு பெற்றோர்களிடமிருந்து கிடைக்கும் மரியாதை தமிழ் வாத்தியாருக்கு கிடைக்கிறதா? மாணவர்கள் கோடை விடுமுறை முடிந்து அடுத்த வகுப்புக்கு செல்லும் போது அந்த பிரிவுக்கு யார் கணக்கு,ஆங்கிலம்,விஞ்ஞானம் கற்றுத் தரும் ஆசிரியர் என்று மண்டையைக் குடைந்து கொள்ளும் பெற்றோர் யார் தமிழ் சொல்லித் தரப் போகிறார் என்று ஆவல் கொள்கிறார்களா? சொந்த தாய் மொழியின் மேல் ஏன் இந்த அசிரத்தை? 

ஜீன்ஸ் அணிந்து தலை விரித்து 'செம்மொழியான தமிழ் மொழியா....ம்ம்ம்ம்' என்று வாய் திறந்து பாடுவோரில் எத்தனை பேருக்கு தமிழ்த் தாய் வாழ்த்து தெரியும்? ரொம்ப பேசினால் அதையும் ரீ மிக்ஸ் செய்து 'youth friendly ' என்கிற பேரில் YouTube ல் வைரல் ஆகச் செய்ய எல்லா விதமான முயற்ச்சிகளிலும் காசு இறைப்பார்கள்.

'சங்கம் வளர்த்த தமிழ்' என்று மேடைகளில் முழங்கினால் போதுமா? அந்த சங்கத் தமிழ் என்னவென்று பெரும்பான்மை தமிழர் அறிவரா ? மொழி, அதுவும் தாய் மொழி என்பது வெறும் வார்த்தை பரிமாற்றத்திற்க்கான கருவி மட்டுமா? ஒரு இனத்தின் பாரம்பரியமும், கலாச்சாரமும், வளர்ச்சியும் சேர்ந்த அடையாளம் இல்லையா? நவ நாகரீகம், வளர்ச்சி ,முன்னேற்றம் என்கிற பேரில் தன் இனத்தின் அடையாளத்தையே தொலைத்து நிற்கும் ஒரு தலைமுறையை உருவாக்கி , அந்த முண்டாசுக் கவிஞன் முன்பு கூறத் தகாதவன் ஒருவன்  கூறிய கொன்றிடல் போலொரு வார்த்தையை நாம் சிரத்தையாய் செயலாக்கிக் கொண்டிருக்கிறோம்.....

6 comments:

  1. ஒரு சோகமான கவனிப்பாரற்ற உண்மையை அழகாய் இனியத் தமிழில் உரைத்தாய். ஆனால் தமிழருக்கு உறைக்குமா?

    தமிழ் பற்றையும், தமிழ் பெருமையையும், தமிழ் பற்றிய கர்வமும் நமக்கேன் இல்லாது போய் விட்டது? அதுவும் இத்தனை அரும்பெரும் இலக்கியங்கள் தமிழில் நடமாடும்போது! முரணாய் தமிழில் உரையாடுவதே ஏதோ நாகரீகம் இழந்தாற் போலவும் மட்டமாக கருதும் அவல நிலை வேறு!

    தமிழ் "இனி" மெல்லச் சாகுமா? சாவு மணி அடித்து கொஞ்சக் காலமாகிவிட்டது. கால வெள்ளத்தில் அகப்பட்டு உருக்குலைந்து மூச்சு விடவே திணறிக் கொண்டிருக்கிறது. காப்பாற்றுவதும், சாக விடுவதும் வரும் சந்ததியினர் கையில். சாவின் நிழலில் ஊசலாடும் நிலைக்கு யார், எது பொறுப்பு?
    தமிழுக்கு வந்த இழுக்கு துடைக்க நாம் என்ன பண்ணலாம்? அல்லது வெள்ளம் தலைக்கு மேல் போய்விட்டதா?

    -J

    ReplyDelete
  2. Usha RamachandranMay 18, 2015 at 6:45 AM

    While I totally agree with you and understand your rantings I would definitely like to mention one thing. England joined the rat race for colonisation much later than her European counterparts. Still English now enjoys an International language status and not Spanish or French. While there are a plethora of indian languages Hindi which was spoken in one of the regions of Uttar Pradesh is a national language. I humbly feel it is because of the aforesaid languages' capacity to assimilate words from various other languages. There are umpteen number of words from indian languages including Tamil have found place in the Oxford dictionary.

    ReplyDelete
    Replies
    1. Usha
      I don't understand what u mean by 'colonization' in this context. English became the lingua franca that it is, 'coz the English spread their net far and wide-remember "the Sun never sets on the British empire"?. That's the reason why English still rules the roost in apna Bharat Mahaan!.
      In my humble opinion, the craze for English proficiency-read sense of elitism associated with that-and perception that job opportunities pan India are dime a dozen if one knows Hindi- coupled of course with the choices parents have shoved down their wards' throats are to blame for the Mother Tongue losing its voice.

      Delete
  3. While English seems to be the lingua-franca , enjoys the snob status (in this context a humorous thing I remember that on his first trip to Bombay my f-i-l started talking in English to the doodhwalla since he couldn't reply in Hindi. You automatically switch to English forgetting momentarily that people are not that literate/conversant in English) that doesn't mean your mother-tongue gets screwed completely. Don't know if this happens in any other state in India. At this rate the state should follow the rechristening fashion to English Nadu!

    PS : OTOH, I was very impressed with a fairly good - English -speaking auto driver in Madras during my last visit to Chennai. Somehow he assumed I didn't know a smidgen of Tamil :-) Kudos to our adaptive tourist-catering auto drivers!!

    ReplyDelete
  4. நன்றாகச் சொன்னாய்!! தமிழை, மொழியை அரசியல் படுத்தினால்.........இதுதான் நிலைமை��ஆனால் டெக்னிக்கல் வார்த்தைகளையும் கணிணி மொழிகளையும் தமிழ்(ழை)ப் படுத்துவது எந்.த அளவுக்கு அவசியம்?

    ReplyDelete
  5. i totally agree to this point that we as tamizhians are more responsible for this deterioration. the day we understand that english is only a language for communication and is not a knowledge, we will change.

    but i am very positive no body can kill this ancient language.. it is a cycle, we will certainly bounce back to the glory of olden times when tamizh had such a respect among other other languages.

    ReplyDelete