Saturday, December 18, 2021

Statement of Purpose- FTII FAC May 2018

 Growing up in the pre-television era, cinema was the only audio-visual entertainment available. But then, watching a film was in the theatre was a privilege to be earned by acing the academics-‘get first rank and be rewarded with movie tickets’, was the family rule. Thus, though I did not realize it then, movies steered me towards academic excellence.

Cinema to me meant not just entertainment but education and awareness as well. It was my window to the world of literature, aesthetics and performing arts. Fascinated by my mother’s recounting of scenes from the movie Pride and Prejudice and Gone with the Wind, I would binge-read the novels. That marked the beginning of my voracious reading habit leading to a degree in literature. I developed an ear for music too, thanks to Binaca Geetmala on Vividh Bharati. Encouraged by a family that allowed me to watch ‘good’ films and discuss them at the dinner table, anecdotes of our movie experiences are part of the family lore. A family that sees movies together, stays together for sure!

Why study film appreciation at all? Why study something that I enjoy anyway? Well, it’s an organic growth process to want to understand the creative energy and passion that goes into the making of the final product. Maybe that’s the reason I attend events like Padharpan at FTII and talk sessions with technicians, music directors and movie makers with fervour. There is so much one can learn about the art and craft of the silver screen. I perceive cinema to be the only inter-disciplinary and consummate form of entertainment available to the common man and the most affordable irrespective of one’s personal, social or political identity. Enchanted by its universal appeal, I have always wondered- why and how are certain shots/frames conceived in a particular way? How can one even conceive of themes like Inception, Jurassic Park or Avatar- leave alone transform it onto the silver screen? What’s the need for the song sequence- to break the monotony or to shift the focus? Why do our desi film makers see movies as two halves with an interval in between and not as a whole? And many such questions. I have noticed with interest how films of the 50s and 60s appealed to certain angst and concerns of the common man, the rise of the experimental art/parallel cinema in the 70s and 80s and the romance- driven 90s. Today, with the advent of technology like 3D, 4D, VFX and VR, the magic of cinema is breaking new grounds. Platforms like the internet, NETFLIX and Amazon Prime impact the content, style and grammar of film-making. Whatever be the format or genre, films are here to stay as a favoured channel of creative entertainment. My strongest desire to not just to have a clinical understanding of films but also to sharpen and nurture the cinephile in me. A course on film appreciation will certainly enlighten me on the development of this art form and its journey to the modern times through lectures, film viewings, discussions and interactions with stalwarts from the industry. I’m sure to discover subtle charms and nuances in films that I had not even noticed before and to appreciate how technology aids the creative flights of fancy in modern day masterpieces. And which better institution from, than FTII to learn it all? The Institute is a formidable brand as a school of cinema, given the pantheon of its illustrious alumni who never fail to credit their alma mater for nurturing and honing their talent. It’s a legitimate desire to walk the corridors that they inhabited and be enlightened by its curriculum.

 
I have been a regular delegate at the Pune International Film Festival for several years now and have enjoyed watching regional and international films. What I enjoy, I value and wish to share the joy wherever and whenever possible. As a soft skills trainer and English Language Instructor, I have incorporated snippets from movies to embellish my training sessions on interpersonal skills, office etiquette, gender sensitivity, body language, ethics, confidence and team building, language proficiency and the like. Going beyond an enduring interest, my love for cinema has proved to be a support. I maintain a bilingual blog with musings on movies among other things. I also host quizzes on movie trivia in social gatherings. Efforts are on o launch a YouTube channel exclusively on movie reviews as an amateur critic (if I may dare call myself so). There’s also the possibility of having discussions around movies with the participants of my training workshops by helping them understand and analyse their own perceptions and personalities through their reaction to the movies. There is so much to look backward to with pride and so much to look forward to with hope. The anticipation of embarking on the Film Appreciation Course is exciting because picture abhi bhi bakki hai, dost!

I have been a regular delegate at the Pune International Film Festival for several years now and have enjoyed watching regional and international films. What I enjoy, I value and wish to share the joy wherever and whenever possible. As a soft skills trainer and English Language Instructor, I have incorporated snippets from movies to embellish my training sessions on interpersonal skills, office etiquette, gender sensitivity, body language, ethics, confidence and team building, language proficiency and the like. Going beyond an enduring interest, my love for cinema has proved to be a support. I maintain a bilingual blog with musings on movies among other things. I also host quizzes on movie trivia in social gatherings. Efforts are on o launch a YouTube channel exclusively on movie reviews as an amateur critic (if I may dare call myself so). There’s also the possibility of having discussions around movies with the participants of my training workshops by helping them understand and analyse their own perceptions and personalities through their reaction to the movies. There is so much to look backward to with pride and so much to look forward to with hope. The anticipation of embarking on the Film Appreciation Course is exciting because picture abhi bhi bakki hai, dost!

LET'S COME CLOSER

 What would you say about the workshop on parenthood organized by the Chinmaya Foundation? That it was Educative, entertaining and much more.

Shri Kulpathi Balakrishna Joshi, in his inaugural speech at the Andhra Mahila Sabha on 6th August, defined parenthood as a ‘sacred responsibility’. In phrases felicitous he remarked how unwittingly modern parents ape the cuckoo that deposits its eggs elsewhere, thus bidding farewell to its duty all so conveniently. This is often so, for the creche and the school have succeeded-though they can never replace-the home as citadels of culture. He called for a social warfare against demoralizing cinema and strikes that corrode a child’s morality. Mrs. Y G Parthasarathy hit the nail on the head when she emphasized the embodiment of values over their enforcement. Being an educationist herself, she decried the pity of television taking over the mantle of surrogate parents. Like a calculator-cultured mind that has forgotten the numerical tables, she opined, we would rather push the child towards TV and Video games than share with him the magic of the waves or the music of a cataract. Perhaps Kamla Das was just too correct: ‘your rooms are always lit by artificial lights and your windows always shut’.

Here is a word of advice to indulgent parents from DR Papakumari – feed restriction and control too in childhood, though in a mild dosage; this would make the child stoic in the face of shocks and disappointments, later. She condemned the present-day-pupil’s routine: music, dance, sports, class work and the inevitable home work which make life a ‘rigorous rigmarole’. She was quick to point out how this tension makes the child’s entity more of a drill than a thrill.

The next day dawned with the Bala Vihar activities being outlined by two Sevikas. Bala Vihar catches the ‘giggling things’ young and imbibes in them traits of honesty and courage. Charity in Chinmaya Foundation begins with children. The fore-noon session saw a lecture rid of awesome jargon by MS. Shyamala Nagarajan on nutrition. She proved to be a connoisseur at that and the audience eventually became gourmets. Mrs. Padma Narasimhan had everyone spellbound with her talk on the relevance of Gita. Karma Yoga, she prescribed is a vitamin forte for the mind. Benefit we did, and we will by that panacea.

In the modern world, where generation gap has become the burning problem, the group discussions proved most assuring. Transactional Analysis, as expounded by Ms Lily Neelankavil, treated the ‘parent effect’ in a logical way. Her clarion call was, ‘don’t dwarf the child’s identity beneath your monstrous ego; give him a sense of belonging, not of possessing’. Mr Gary Miller’s ‘effective communication’ was everything of a grand treat. What with live demonstrations and self-evaluation tests, it was a pleasure to be reminded of our values. Mr Miller denounced the dichotomy between ‘do as I do’ and ‘do as I say’. The catchy poster ‘ I would rather you walk with me than point the way’ was his focal point.

The open session which was something of an epilogue, dispelled what few doubts there could have been. There weren’t any ‘resolutions galore’, yet a consensus was reached. All parents agreed to spare the rod- thank you dears, we too would spare you the bother. Here are a few points to ponder-what if the child is a bit dim or naughty? Roses do have thorns, yet isn’t the rose sweet? Childhood is a symbolic dreamland, your care and caress will enhance the sweetness-like a dimple on a smiling cheek….. 

Monday, April 5, 2021

To Amma on her 85th birthday on 2nd August 2014

 


Chingaru,  Chingakka ,Chingaru athai, Chingu, Rajam, Rajalakshmi, Chinna Manni, amma,பாட்டி - என்று எத்தனை விதமாய் நாங்கள் அழைத்தாலும், you define every relationship behind those salutations - daughter, sister , cousin ,wife ,daughter in law ,sister in law ,mother ,mother in law,grand mother  ..You have also defied being complacent in those grooves and have set new standards by raising the bar .உன்னை மாதிரி ஒரு மன்னியோ, அத்தையோ,மாட்டுப் பெண்ணோ,அம்மாவோ இனி மேல் பிறந்தால்தான் உண்டு. நீ என் அம்மாவாக அமைய நான் என்ன புண்ணியம் செய்தேனோ..?


The last of my sisters married and left for her marital home when I was 18 and I married at 26-so I had the privilege of being the only other woman in our household for 8 long years.How many habits and values I've imbibed from you just by observing you as you went about your routine...அதி காலை கருக்கலில், பூஜை அலமாரியில் எரியும் ஸ்வாமி விளக்கு வெளிச்சத்தில்,ஏலு நாராயணா ,ஏலு லக்ஷ்மி ரமணா ,ஏலு கிரி ஒடையா ..என்று உன் குரலில் விடியும் என் பூபாளக் காலைகள் .இடி இடிச்சா, பயப்படாதே, அர்ஜுனா phalguna ,பார்த்திபா ,கிரீடி ன்னு சொல்லு என்று நீ சொல்லிக் கொடுத்த மந்திரத்தின் விஞ்ஞான சூத்திரம் இன்றுதான் எனக்கு புரிந்தது.என்னுடைய english language proficiency ஐ எல்லோரும் பாராட்டும் போது அதற்க்கு பிள்ளையார் சுழி போட்டது நீ என்பதை நான் என்றும் மறந்ததில்லை.நேற்று தான் நடந்தது போல் இருக்கு..First day ,first show என்பது  போல் my first assignment in prose in my first year of BA english literature .school final வரை தமிழ் மீடியத்தில் படித்தாலும் யாருக்கும் சளைத்தவள் இல்லை என்று நிரூபிக்க வேண்டும் என்று எனக்கு நானே விட்டுக்கொண்ட சவால்.இந்த லட்சணத்தில் assignment க்கு word restriction வேறு.Style ,substance ,vocabulary என்று எல்லா aspect களிலும் என் rough draft ஐ மெருகு ஏற்றினவள் நீ.அந்த assignment க்கு கிடைத்த முதல் இடம் motivated me to stay right on top all through the three years .முதல் முதலாக 'childish ' and 'child -like ' என்கிற இரண்டு பதங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று அன்று நீ எனக்கு உணர்த்தியதை நீ மறந்து கூட போய் இருக்கலாம்.1,Home Road வீட்டின் kitchen வாசல் பல விஷயங்களில் எனக்கு கீதோபதேச க்ஷேத்ரம் தான்.

 


Evening twilight sky யில் crimson red என்று என் வாழ்க்கையில் புதியதாய் வண்ணம்  கூட்டியது நீ.இரவு நேர வானத்தில் சப்த ரிஷி மண்டலத்தையும் Orion constellation ஐயும் அடையாளம் காட்டியதும் நீதான்.சிறு வயதில் சாப்பிடும் வேளையில் மஹா பாரதத்தில் சந்திரஹாசன் கதையும், Black Beauty கதையும் சொல்லி ருசியான ரசம் சாதம் மட்டும் ஊட்டவில்லை நீ- கலாச்சாரத்தையும், இலக்கியத்தையும் ருசிக்கும் ரசனையையும் சேர்த்து ஊட்டினாய்.


நான் என் குழந்தைகளுக்கு பாடிய தாலாட்டில்  'தசாவதார லாலி' யாகவும், என் பகவத் ஸ்மாரனைகளில் அபிராமி அந்தாதியாகவும் வாசம் செய்கிறாய் நீ.ஒவ்வொரு மாதமும் ஷ்ரவண விரதத்தின் போது கோவிலுக்கு அரிசி கொண்டு போய் சேர்க்கும் போது , நீ தினமும் உலை வைக்கும் போது பிடி அரிசி தர்மத்துக்கு என்று தனியாய் எடுத்து வைத்தது ஞாபகம் வராமல் போனதே இல்லை.ஒவ்வொரு பிரயாணத்தின் போதும் your methodical way of planning has always been a ready reckoner for me .


தொடர் கதையாய் எழுத இன்னும்  எத்தனையோ விஷயங்கள், அத்தனையும் விசேஷங்கள் (ஸ்பெஷல்).அழகு,அறிவு.ஆற்றல் (your tailoring and embroidery skill is just one among many ),அன்பு (நீ சுரபியை சம்ரக்ஷணை செய்ததைப் பார்த்தபோது உன் குழந்தைகளான எங்களை எவ்வளவு ஆசையுடன் வளர்த்து இருப்பாய் என்று நான் உணர்ந்தேன்.) எல்லாம் சேர்ந்த நீ ஒரு ரோல் மாடல் worth emulating .


You ran a பெரிய சம்சாரம் with limited resources .But I have never known you to have come under stress and thrown  words or falter in your responsibilities .வயதான மாமியாருக்கு மரியாதை, ஆசாரத்துடன் கவனிப்பு; பிள்ளைகளின் வளர்ப்பு, கல்யாணம், பேரக் குழந்தைகள் வரவு,மாப்பிள்ளைகள்,சம்பந்திகள்,உறவினர்கள்,அக்கம் பக்கத்தினர்கள், அப்பாவின் colleagues எல்லோரிடத்திலும் அனுசரணை, விருந்தோம்பல் என்று எல்லா கோணங்களிலும் உன் தனி முத்திரை பதித்தவள் நீ.யாரிடத்திலும் நீ முகம் சுளித்தோ ,கவனிப்பில் குறை வைத்தோ நான் பார்த்ததில்லை.சொல்லச் சொல்ல இனிக்குதம்மா...


A very unique characteristic I 've known in you is your sense of humour and witty repartees .That you 've kept it alive is a matter of great joy  and evidence of your cheerful personality .I do recall and narrate some in my conversations.

So there you see amma ,you are there in my thought ,word and deed everyday ,day after day after day .நான் உன்னுடன் இல்லாவிட்டாலும் நீ என்றும் என்னுடன் தான் இருக்கிறாய். இதோ உன்னுடைய 85வது பிறந்த நாளை முன்னிட்டு உன்னைப் பற்றி எழுதியதில் செல்லமாய் உன் மடியில் தலை சாய்த்து படுத்த கதகதப்பான சுகம் எனக்கு...இதை விட ஆசீர்வாதம் வேறு என்ன வேண்டும் எனக்கு..?

Thanks Amma for being what you are and for being there for us... I wish you have wonderful time today and always.

Thursday, December 8, 2016

A Modern Day Draupadi

"Hell hath no fury like a woman scorned".
29 years ago, as the hearse of AIADMK CM MGR left Rajaji Hall for his final resting place at the Marina Beach, Jayalalitha, then the propaganda secretary of the party was shoved off by the party cadres owing allegiance to the CM's widow. 29 years later, the same party cadres stood with their heads bowed in respect mourning her demise at the same venue. When she was allegedly molested by ruling party members at the TN Assembly, she vowed to return to the Assembly only as CM. And return she did, not once, but 4 times over and 2 of the times, back to back, an unprecedented record in the state's history in 3 decades. A modern day Draupadi indeed!

Parallels are often drawn between her and Mrs. Indira Gandhi. Mrs. Gandhi was to the manor born so to say and had actually seen the birth of a nation from her very home and her entry into public life was a given. She had family, education, upbringing and a formidable legacy to fall back on during turbulent times. JJ on the other hand had none of these support systems. A reluctant politician, though she called MGR her mentor, she was compelled to charter her own path, blazing a trail as CM, 4 times over. Hers is history scripted not by Destiny, but one that she chose to write herself!

Thursday, January 7, 2016

நான் கண்ட பாரதி-3

அத்தனைக்கும் சிகரம் வைத்தாற்போல் தெய்வ நம்பிக்கை கொண்ட மானுடன்.
நீயே சரணம், நினதருளே சரணம் 

என்று பாடினாலும்,ஏதோ நீயே பார்த்து எனக்கு அருள் செய் என்று இறைவனின் discretion க்கு விட்டு விடவில்லை.தன் இனத்திற்கும் தனக்கும் என்னென்ன வேண்டும் என்று பட்டியல் போட்டு வரம் கேட்பான்.
வேண்டாதனைத்தையும் நீக்கி வேண்டியதனைத்தும் அருள்வதுன் கடனே 
என்று demand வேறு செய்வான்.எனக்கு என்ன வேண்டும் என்பதை எல்லாம் நானே கணக்காக சொல்லி விடுகிறேன், நீ வெறுமே SANCTIONED என்று கையெழுத்து இட்டால் மட்டும் போதும் என்று உரிமையாய் , செல்லமாய், கொஞ்சுகிறான், கெஞ்சுகிறான்...எப்படி.
.பூமண்டலத்தில் அன்பும் பொறையும் 
விளங்குக: துன்பமும்,மிடிமையும் நோவும் 
சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம் 
இன்புற்று வாழ்க என்பேன்! இதனை நீ 
திருச்செவி கொண்டு திருவுளம் இறங்கி 
'அங்கனே யாகுக' என்பாய் அய்யனே 
சக்தியிடமும், முருகனிடமும்,கணபதியிடமும் அப்படி ஒரு அந்யோன்ய பாவம் !
நம் இச்சைகளை செவி மடுத்து பூர்த்தி செய்யும் விநாயகனை வேண்டுகிறான்..
எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் 
கேளாய் கணபதி!
...கனக்குஞ்செல்வம் ,நூறு வயது....இவையும் தர நீ கடவாயே 

இந்த இரண்டு வரங்களும் அவனுக்கு வாராமலே போயின...கடைசி காலம் வரை செல்வம் சிறிதும் இல்லாமல்  வறுமையிலேயே உழன்று, நூறு இல்லை, ஐம்பது வயது வரை கூட வாழாமல் போன அந்த மனிதன் இவ்வுலகை விட்டுப் பிரிந்து போய்  விட்டாலும், அவன் பாட்டும், புகழும் என்றென்றும் சிரஞ்சீவியாக நம்முடன் இருக்கத்தான் போகின்றன. அவன் கனவு கண்ட தேச விடுதலை கிடைத்து 68 வருடங்கள் ஆனா பின்னாலும் அவன் வேண்டிய சமுதாய சீர்திருத்தங்கள் பலவும் இன்னும் கனவாகவே இருக்கக் காண்கிறோம்.அவன் சிந்தனைகளை நனவாக்குவதே அந்த முண்டாசுக் கவிஞனின் நினைவுக்கு நாம் செய்யக்கூடிய முதல் மரியாதை...சிந்திப்போம், செயல் படுவோம், செயல் படுத்துவோம்! 

வாழ்க பாரதி!
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
வந்தே மாதரம்!வந்தே மாதரம்!வந்தே மாதரம்!

நான் கண்ட பாரதி-2

தாய் மொழியான தமிழின் உயர்வைப் பாடாமல் இருப்பானா?

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் 
இனிதாவதெங்கும் காணோம் 

என்றானே...மொழி வெறியனோ? என்று ஐயப்பாடு தோன்றும்...மொழிப் பற்று என்பது வேறு, கண் மூடித்தனமான வெறி என்பது வேறு என்று அறிந்த விவேக சூரியன் (ஞான பானு) அவன்.

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலே மகிமை இல்லை 

என்று அறிவுறித்தி,

பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் 
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும் 
இறவாத புகழுடைய புது நூல்கள் 
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் 

என்று மொழியின் வளர்ச்சிக்கு வித்திடுவான்.

தாய் மொழியைப் பாடியவன் தாய் நாட்டை  மறப்பானா?

பாருக்குள்ளே நல்ல நாடு,எங்கள் பாரத நாடு 

என்று பெருமை பேசி,ஒளி  மயமான எதிர் காலத்தை கனவு கண்டு, புதிய கோணங்கியாய் நாட்டுக்கு நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது என்று குறி சொல்வான்.
திரைப் படங்களிலே காதலனும் காதலியும் மண முடித்தால் 'and they lived happily ever after ' என்று முடித்துவிடுவார்கள்...வாழ்க்கை என்னும் பெரிய கதை இனிமேல்தான் துவங்கப் போகிறது என்பதை மறந்து.அதே போல், விடுதலை மட்டுமே லட்சியம் என்றில்லாமல், விடுதலைக்குப்பின் இந்த நாட்டை எப்படி ஆள்வது, என்னென்ன செய்ய வேண்டும் என்று,தேசத்தின் வளர்ச்சியையும், முன்னேற்றப் பாதையையும் துறை வாரியாக - department wise -planning செய்கிறான்.

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் 
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் 
.....காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம் 
கலை வளர்ப்போம் கொல்லர் உலை வளர்ப்போம் 

என்று தொழிலுக்கும் ,கல்விக்கும்,கலைகளுக்கும் பசுமைக்கும் குரல் கொடுக்கின்றான்.Inter linking of rivers  பற்றி அன்றே பாடி விட்டான்.

வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் வையத்து நாடுகளில் பயிர் செய்குவோம் 
என்று ஒரு தீர்கதரிசியால் மட்டுமே உணர்ந்து சொல்ல முடியும்.

மகாகவி மட்டுமா, கவித்துவம் வாய்ந்த ரசிகனும் கூட.
சமத்துவம், பெண்ணுரிமை, மொழி, தேசம்...சரிதான் படு serious ஆனா ஆசாமிதான் என்று தோணும். ஆனால் அவனைப் போல் உணர்ச்சியும், மகிழ்ச்சியும், ஆசையும், காதலும் சேர்ந்த ரசிகன் வேறொருவர் இல்லை என்று ஆணித்தரமாக சொல்லலாம்.இல்லை என்றால், கிழிந்த மேலாடைக்கு மாற்று துணி இல்லாமல், கருப்பு கோட் அணிந்து அதை மறைத்து திரிந்த வறுமையிலும், 

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா, இறைவா 

என்று மகிழ்ந்து கூத்தாட சாதாரண மனிதனால் சாத்தியமா? 
காணி நிலம் வேண்டுவான்..அப்புறம் கொஞ்சமே கொஞ்சம் 'அழகிய 'தூணும் நன் மாடங்களும் கொண்டதாய்' ஜஸ்ட்ஒரு மாளிகை...' இன்னும் கேணி...தென்னை மரமும் இளநீரும்..தென்னை மரம் காற்றிலாட தென்றலும், தென்னங்கீற்றின் ஊடே வரும் நிலா வெளிச்சமும் ...குயில் ஓசையும்....அப்பப்பா...போதுமா...? எப்படிப் போதும்...தனிமையிலே இனிமை காண முடியுமா...
ஆதலினால் காதல் செய்வீர் 
என்றவனாயிற்றே  ..ஆகவே, இன்னும் வேண்டுவான்...பாட்டுக் கலந்திட 'பத்தினிப் பெண்ணும்' அவளோடு 'களிக்கக்  கவிதையும்'....

தெவிட்டாத இனிப்பான வாழ்வை இதை விட ரசனையாய் வேண்டிட முடியுமா? அவன் இயற்கையை, மனித வாழ்வை , வாழ்வின் சுவையை அனுபவிக்க ஆசைப் பட்ட ரசிகன்...பின்னர்தான் கவிஞன்.

நான் கண்ட பாரதி -1

பாட்டுக்கொரு புலவன் பாரதி...என்பார்கள்.ஏன், பாட்டுக்கள் மட்டுமா  இயற்றினான்? உரைநடையிலும்தான் அவன் கோலோச்சினான். விவேகபானு,சுதேசமித்திரன்,இந்தியா  என்று செய்திதாள்களிலும் பத்திரிகையாளனாக பணி  புரிந்த அந்த சீர்திருத்தவாதி, சிறுகதைகளும் எழுதினான். ஆனாலும் அவன் மேதாவிலாசமும் , புரட்சி ஓங்கிய கருத்துக்களும் , மொழி ஆளுமையும் விஞ்சி நின்றது அவன் கவிதைகளில்தான்.

இலக்கியத்தை வடிப்பதற்கு மட்டும் அல்ல அதை படிப்பதற்கும் ரசிப்பதற்கும் கூட பண்டிதன் போல் பாண்டித்த்யம்  தேவை என்கிற நிலைமையை தலை கீழாய் புரட்டிப் போட்டது அவன் எழுத்து. தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த அனைவர்க்கும் புரியும்படி, மேன்மையான இலக்கியத்தை சாமான்யனிடத்தில் கொண்டு போய் சேர்த்தவன் இந்த நூற்றாண்டுக் கவிஞன்.எண்ணத்தில் எழுச்சியும் எழுத்தில் எளிமையும் அவன் முத்திரை, முகவரி.

எப்படிப் பாடினனோ ...வசன கவிதையா, காவடிச்சிந்தா, நாட்டுப்புற பாடலா,வெண்பாவா, விருத்தமா,தீம் தரிகிட என்று ஜதியா ...எல்லாம் அவன் பல்லக்கில் ஏறி வரும்.
எதைப் பாடினான்?...இல்லை இல்லை எதைத்தான் பாடவில்லை...
தமிழ் மொழி இலக்கியத்தில் மட்டும் அல்லாமல் அந்த மொழி மூலம் பொது மக்களிடம், தலைமுறைகள் கடந்தும் தாக்கத்தை ஏற்படுத்திய முன்னோடி அவனை 'மகாகவி' என்று நாம் அழைப்ப து உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை.

குழந்தைகளுக்காக பாடினானே ...அது பாடல் இல்லை, பாடம்!ஆஹா ! குழந்தைகளுக்கான பாடமா....அப்போ பெரியவங்கதான் மொதல்ல உட்கார்ந்து படிக்கணும்...! இல்லை, இது குழந்தைகள் தாமே அறிந்து படிக்க வேண்டிய வாழ்க்கை பாடம்! இன்னும் சொல்லப் போனால் ...a  lesson in life 's basic values .சரிதான், moral science lesson ஆ..குழந்தைகள் சொல் பேச்சு கேட்டதாய் சரித்திரம் உண்டா...அதனால் chocalate குடுத்து அவர்களை வசியம் பண்ணுவது போல், அவர்களுக்கு பிடித்தமான விஷயத்தை சொல்லி அழைக்கிறான்.

ஓடி விளையாடு பாப்பா....

விளையாட்டு என்றால் ஓடி வராத குழந்தைகளும் உண்டோ...? அருகே வந்தபின், நல் புத்தி சொல்லுவான்....

நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா...

ஒரு விஷயம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.ஓடி விளையாடு என்றான்...உட்கார்ந்த இடத்திலே Angry Bird ம் Temple ரன் நும் விளையாடச் சொல்லவில்லை. பிற்கால சந்ததியர்களின் போக்கு அன்றே தெரிந்து , couch potato வாக மாறாமல் வலுவான உடலைப் பேண வழி சொல்லுகின்றான். தனித் தீவாய் வாழாமல், சேர்ந்து வாழப் பழக, 

கூடி விளையாடு பாப்பா...

என்று team play ஐ வாழை பழத்தில் ஊசி போல் ஏற்றுவான் . காக்கை, குருவி, கோழி, ஆடு, மாடு, நாய்...இந்த உயிரினங்கள் எல்லாம் மனிதனை அண்டிப் பிழைக்கும் ஜீவராசிகள் என்பதால்,அவைகளை பேணிக் காக்கும் பொறுப்பு மனிதனுடையது. ஆகவே, சகல ஜீவராசிகளிடமும் இணக்கமாய் வாழச் சொல்லுவான். எடுத்த எடுப்பிலேயே எண்ணையும் எழுத்தையும் கற்றுக் கொள்ளச் சொல்லவில்லை...அதை விட முக்கியம்...தனி மனித ஒழுக்கமும், பொது நலமும், தேசிய ஒருமைப்பாடும், தெய்வ சிந்தனையும்...அதைத்தான் அவன் தேனில் குழைத்த மருந்து போல் பாப்பா பாட்டில் புகட்டுகிறான்.!

இளைய சமுதாயத்தை கூப்பிடுகிறான்...எதற்கு?தேசத்தின் வருங்காலத்தை நிர்ணயம் செய்யப்போகும் சமுதாயச் சிற்பிகள் அவர்கள்தானே...அவர்களை பெரியோர்கள் நாம் சரியாக வழி நடத்த வேண்டாமா? சரிதான், அது என்ன அவ்வளவு சுலபமா...வா, நல்ல புத்தி சொல்கிறேன், guide செய்கிறேன் என்றால் அய்யோ ! ஆளை விடுடா சாமி என்று காத தூரம் ஓட மாட்டார்களா...? அறியாதவனா நம் அய்யன்...? என்ன சொன்னால், எப்படி சொன்னால் காரியம் நடக்கும் என்ற psychology தெரிந்த தந்திரவாதி அவன்! ஒரு யுக்தி செய்கிறான்...ஒருவன் நல்லவனோ இல்லையோ, 'அவன் ரொம்ப நல்லவன்டா' என்று good conduct certficate குடுத்து விட்டால், அப்புறம் எதிர்பார்த்ததுக்கும் மேலாக மிகச் சிறப்பாக செய்து முடிப்பார்கள்.அது ஒரு tactic -self fulfilment prophecy போல.நீ சரியே இல்லை, உனக்கு போறாது...அப்படி, இப்படி என்று சொல்லாமல், 

ஒளி  படைத்த கண்ணினாய், வா வா வா !
உறுதி கொண்ட நெஞ்சினாய், வா வா வா!.....
வலிமை கொண்ட தோளினாய்,.....
 எளிமை கண்டிரங்குவாய்....வா வா வா 

 என்று போற்றி அழைக்கிறான். ஏன் ? கொஞ்சம் தட்டிக் கொடுத்தால் வெட்டிக் கொண்டு வா என்றால் கட்டிக் கொண்டே வரும் வயது என்று இந்த இளைய சமுதாயத்தின் துடிப்பை நன்கு அறிந்த நல் ஆசிரியனல்லவா அவன்!

Emancipation of women ...

நிமிர்ந்த நன்னடை,நேர்கொண்ட பார்வை கொண்ட புதுமைப் பெண்டிரின் உரிமையை கொண்டாடிய முதல் 'Complete Man ' பாரதி! அதுவும் ஒரு நூற்றாண்டு முன்பே.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் 
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் ...

என்று பெண்களை முன்னேற்றப் பாதையில் நடக்க அல்ல...களித்து கும்மியடிக்க வைத்த பெண்ணுரிமை patron நம் பாரதி!

என்ன இல்லை அவன் கவிதையில்?

சமூக அக்கறை இல்லையா...? 
நாம் செய்யும் செயல்களில் பிழை இருப்பின், அதை தப்பு, தவறு, சிறுமை, கொடுமை, குற்றம் என்று பிரித்து பாகு படுத்துவோம். ஆனால் ஜாதி பேதம் என்கிற செயலை, பாரதி தவறு என்றோ குற்றம் என்றோ கூட சொல்வதில்லை...

குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் 

பாவம் -என்று சம்மட்டியால் ஒரே அடி வைக்கிறான்.பிராயச்சித்தமே இல்லாத பாவம்!

அறச் சீற்றம் இல்லையா?

தனி மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்!
என்று தார்மீகக் கோபம் வளர்ப்பான்...
பாதகஞ்செய்வோரைக் கண்டால் 
பயங்கொள்ளல் ஆகாது பாப்பா...
மோதி மிதித்து விடு பாப்பா, அவர் 
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா 
என்று ரௌத்திரம் பழகச் சொல்வான்