Thursday, January 7, 2016

நான் கண்ட பாரதி-3

அத்தனைக்கும் சிகரம் வைத்தாற்போல் தெய்வ நம்பிக்கை கொண்ட மானுடன்.
நீயே சரணம், நினதருளே சரணம் 

என்று பாடினாலும்,ஏதோ நீயே பார்த்து எனக்கு அருள் செய் என்று இறைவனின் discretion க்கு விட்டு விடவில்லை.தன் இனத்திற்கும் தனக்கும் என்னென்ன வேண்டும் என்று பட்டியல் போட்டு வரம் கேட்பான்.
வேண்டாதனைத்தையும் நீக்கி வேண்டியதனைத்தும் அருள்வதுன் கடனே 
என்று demand வேறு செய்வான்.எனக்கு என்ன வேண்டும் என்பதை எல்லாம் நானே கணக்காக சொல்லி விடுகிறேன், நீ வெறுமே SANCTIONED என்று கையெழுத்து இட்டால் மட்டும் போதும் என்று உரிமையாய் , செல்லமாய், கொஞ்சுகிறான், கெஞ்சுகிறான்...எப்படி.
.பூமண்டலத்தில் அன்பும் பொறையும் 
விளங்குக: துன்பமும்,மிடிமையும் நோவும் 
சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம் 
இன்புற்று வாழ்க என்பேன்! இதனை நீ 
திருச்செவி கொண்டு திருவுளம் இறங்கி 
'அங்கனே யாகுக' என்பாய் அய்யனே 
சக்தியிடமும், முருகனிடமும்,கணபதியிடமும் அப்படி ஒரு அந்யோன்ய பாவம் !
நம் இச்சைகளை செவி மடுத்து பூர்த்தி செய்யும் விநாயகனை வேண்டுகிறான்..
எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் 
கேளாய் கணபதி!
...கனக்குஞ்செல்வம் ,நூறு வயது....இவையும் தர நீ கடவாயே 

இந்த இரண்டு வரங்களும் அவனுக்கு வாராமலே போயின...கடைசி காலம் வரை செல்வம் சிறிதும் இல்லாமல்  வறுமையிலேயே உழன்று, நூறு இல்லை, ஐம்பது வயது வரை கூட வாழாமல் போன அந்த மனிதன் இவ்வுலகை விட்டுப் பிரிந்து போய்  விட்டாலும், அவன் பாட்டும், புகழும் என்றென்றும் சிரஞ்சீவியாக நம்முடன் இருக்கத்தான் போகின்றன. அவன் கனவு கண்ட தேச விடுதலை கிடைத்து 68 வருடங்கள் ஆனா பின்னாலும் அவன் வேண்டிய சமுதாய சீர்திருத்தங்கள் பலவும் இன்னும் கனவாகவே இருக்கக் காண்கிறோம்.அவன் சிந்தனைகளை நனவாக்குவதே அந்த முண்டாசுக் கவிஞனின் நினைவுக்கு நாம் செய்யக்கூடிய முதல் மரியாதை...சிந்திப்போம், செயல் படுவோம், செயல் படுத்துவோம்! 

வாழ்க பாரதி!
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
வந்தே மாதரம்!வந்தே மாதரம்!வந்தே மாதரம்!

2 comments:

 1. Great conclusion !! You've spotlighted (spotlit ?) on things (esp his petition to Ganapathi) that aren't normally mentioned on a discussion of his poetry.

  There is yet another aspect of Bharathi you could've touched on. He was a great vedantin. "நான்" கவிதை இதற்கு கட்டியங் கூறும். "நான் என்னும் பொய்யை நடத்துபவன் நானே" goes a line.

  One request -- அவன், இவன் என்று ஏக வசனத்தில் பாரதியை விளிக்காமல் அவர் ,இவர் என்று அழைக்கலாமே!

  ReplyDelete
  Replies
  1. Jay!

   வருகைக்கும் பதிவுக்கும் நன்றி. பாரதியிடம் மரியாதையை விடவும் சலுகையான ஒரு அந்நியோன்னிய பாவம் இருப்பதால் உரிமையுடன் ஏக வசனம் வருகிறது. வீட்டில் அப்பாவை 'நீங்கள்' என்று விளிக்கும் நாம் அம்மாவை 'நீ' என்றே அழைப்பது போல் .

   Delete