Chingaru, Chingakka ,Chingaru athai, Chingu, Rajam, Rajalakshmi, Chinna Manni, amma,பாட்டி - என்று எத்தனை விதமாய் நாங்கள் அழைத்தாலும், you define every relationship behind those salutations - daughter, sister , cousin ,wife ,daughter in law ,sister in law ,mother ,mother in law,grand mother ..You have also defied being complacent in those grooves and have set new standards by raising the bar .உன்னை மாதிரி ஒரு மன்னியோ, அத்தையோ,மாட்டுப் பெண்ணோ,அம்மாவோ இனி மேல் பிறந்தால்தான் உண்டு. நீ என் அம்மாவாக அமைய நான் என்ன புண்ணியம் செய்தேனோ..?
The last of my sisters married and left for her marital home when I was 18 and I married at 26-so I had the privilege of being the only other woman in our household for 8 long years.How many habits and values I've imbibed from you just by observing you as you went about your routine...அதி காலை கருக்கலில், பூஜை அலமாரியில் எரியும் ஸ்வாமி விளக்கு வெளிச்சத்தில்,ஏலு நாராயணா ,ஏலு லக்ஷ்மி ரமணா ,ஏலு கிரி ஒடையா ..என்று உன் குரலில் விடியும் என் பூபாளக் காலைகள் .இடி இடிச்சா, பயப்படாதே, அர்ஜுனா phalguna ,பார்த்திபா ,கிரீடி ன்னு சொல்லு என்று நீ சொல்லிக் கொடுத்த மந்திரத்தின் விஞ்ஞான சூத்திரம் இன்றுதான் எனக்கு புரிந்தது.என்னுடைய english language proficiency ஐ எல்லோரும் பாராட்டும் போது அதற்க்கு பிள்ளையார் சுழி போட்டது நீ என்பதை நான் என்றும் மறந்ததில்லை.நேற்று தான் நடந்தது போல் இருக்கு..First day ,first show என்பது போல் my first assignment in prose in my first year of BA english literature .school final வரை தமிழ் மீடியத்தில் படித்தாலும் யாருக்கும் சளைத்தவள் இல்லை என்று நிரூபிக்க வேண்டும் என்று எனக்கு நானே விட்டுக்கொண்ட சவால்.இந்த லட்சணத்தில் assignment க்கு word restriction வேறு.Style ,substance ,vocabulary என்று எல்லா aspect களிலும் என் rough draft ஐ மெருகு ஏற்றினவள் நீ.அந்த assignment க்கு கிடைத்த முதல் இடம் motivated me to stay right on top all through the three years .முதல் முதலாக 'childish ' and 'child -like ' என்கிற இரண்டு பதங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று அன்று நீ எனக்கு உணர்த்தியதை நீ மறந்து கூட போய் இருக்கலாம்.1,Home Road வீட்டின் kitchen வாசல் பல விஷயங்களில் எனக்கு கீதோபதேச க்ஷேத்ரம் தான்.
Evening twilight sky யில் crimson red என்று என் வாழ்க்கையில் புதியதாய் வண்ணம் கூட்டியது நீ.இரவு நேர வானத்தில் சப்த ரிஷி மண்டலத்தையும் Orion constellation ஐயும் அடையாளம் காட்டியதும் நீதான்.சிறு வயதில் சாப்பிடும் வேளையில் மஹா பாரதத்தில் சந்திரஹாசன் கதையும், Black Beauty கதையும் சொல்லி ருசியான ரசம் சாதம் மட்டும் ஊட்டவில்லை நீ- கலாச்சாரத்தையும், இலக்கியத்தையும் ருசிக்கும் ரசனையையும் சேர்த்து ஊட்டினாய்.
நான் என் குழந்தைகளுக்கு பாடிய தாலாட்டில் 'தசாவதார லாலி' யாகவும், என் பகவத் ஸ்மாரனைகளில் அபிராமி அந்தாதியாகவும் வாசம் செய்கிறாய் நீ.ஒவ்வொரு மாதமும் ஷ்ரவண விரதத்தின் போது கோவிலுக்கு அரிசி கொண்டு போய் சேர்க்கும் போது , நீ தினமும் உலை வைக்கும் போது பிடி அரிசி தர்மத்துக்கு என்று தனியாய் எடுத்து வைத்தது ஞாபகம் வராமல் போனதே இல்லை.ஒவ்வொரு பிரயாணத்தின் போதும் your methodical way of planning has always been a ready reckoner for me .
தொடர் கதையாய் எழுத இன்னும் எத்தனையோ விஷயங்கள், அத்தனையும் விசேஷங்கள் (ஸ்பெஷல்).அழகு,அறிவு.ஆற்றல் (your tailoring and embroidery skill is just one among many ),அன்பு (நீ சுரபியை சம்ரக்ஷணை செய்ததைப் பார்த்தபோது உன் குழந்தைகளான எங்களை எவ்வளவு ஆசையுடன் வளர்த்து இருப்பாய் என்று நான் உணர்ந்தேன்.) எல்லாம் சேர்ந்த நீ ஒரு ரோல் மாடல் worth emulating .
You ran a பெரிய சம்சாரம் with limited resources .But I have never known you to have come under stress and thrown words or falter in your responsibilities .வயதான மாமியாருக்கு மரியாதை, ஆசாரத்துடன் கவனிப்பு; பிள்ளைகளின் வளர்ப்பு, கல்யாணம், பேரக் குழந்தைகள் வரவு,மாப்பிள்ளைகள்,சம்பந்திகள்,உறவினர்கள்,அக்கம் பக்கத்தினர்கள், அப்பாவின் colleagues எல்லோரிடத்திலும் அனுசரணை, விருந்தோம்பல் என்று எல்லா கோணங்களிலும் உன் தனி முத்திரை பதித்தவள் நீ.யாரிடத்திலும் நீ முகம் சுளித்தோ ,கவனிப்பில் குறை வைத்தோ நான் பார்த்ததில்லை.சொல்லச் சொல்ல இனிக்குதம்மா...
A very unique characteristic I 've known in you is your sense of humour and witty repartees .That you 've kept it alive is a matter of great joy and evidence of your cheerful personality .I do recall and narrate some in my conversations.
So there you see amma ,you are there in my thought ,word and deed everyday ,day after day after day .நான் உன்னுடன் இல்லாவிட்டாலும் நீ என்றும் என்னுடன் தான் இருக்கிறாய். இதோ உன்னுடைய 85வது பிறந்த நாளை முன்னிட்டு உன்னைப் பற்றி எழுதியதில் செல்லமாய் உன் மடியில் தலை சாய்த்து படுத்த கதகதப்பான சுகம் எனக்கு...இதை விட ஆசீர்வாதம் வேறு என்ன வேண்டும் எனக்கு..?
Thanks Amma for being what you are and for being there for us... I wish you have wonderful time today and always.