"Don't worry, being fore -warned is being fore -armed ", இன்றைய ராசி பலன் போல் உரையாடலை முடித்தாள் சுஜி. அடுத்த வாரம் வரப்போகும் சூறாவளிக்கு இப்பவே தலையில் இடி இறங்கியது போல் இருந்தது ராஜிக்கு .
விஷயம் வேறு ஒன்றும் இல்லை...தங்கை சுஜியின் வீட்டில் பெரியம்மா விட்ட பெருமூச்சு என்ற புயல் இப்போ திசை திரும்பி ராஜியின் வீட்டில் மையம் கொள்ளப் போகிறது, புயலின் வேகம், பின் விளைவுகள் என்னென்ன என்று tsunami alert போல் சுஜி விளாவரியாக விவரித்ததுதான்.
"நான் வேணா gobi manchurian , செட்டிநாடு காரக் கொழம்புன்னு அப்பப்போ அசத்தட்டுமா?", யாமிருக்க பயமேன் என்று அபய ஹஸ்தம் அளிக்க முற்பட்டான் ராஜியின் மணவாளன்.
"ஐயோ! வேற வினையே வேண்டாம்..புருஷன கைக்குள்ள போட்டுண்ட கைகேயின்னு எனக்கும், பொண்டாட்டி தாசன்னு உங்களுக்கும் பட்டம் கெடைக்கனுமா .."
சிறிது நேரம் நிதானமாக யோசித்ததில், " என்னடி பொல்லாத பெரிம்மா..எட்டு ஊருக்கு ஒண்டி ஆளா சமைப்பே.. வீட்ட பராமரிக்கறதிலே உன்னை அடிச்சுக்க ஆள் கிடையாதுன்னு மாமியாரின் வாயாலேயே ப்ரஹ்ம ரிஷி பட்டம் வாங்கினவளாச்சே நீ..இதுக்குப் போயி அலட்டிக்கலாமா..." தப்புத் தாளங்கள் ரஜினி காந்த் பிரத்யட்சமாக வந்து motivate செய்தாற்போல நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
பெரியம்மா ஒரு week dayஇல் வந்ததால் மணவாளன் ஆபீசில் late permission சொல்லி விட்டு தானே ஸ்டேஷன் போய் sedan class காரில் red carpet welcome கொடுத்தான்.தனக்கும் ராஜிக்கும் படிக்க பொழுது இல்லைன்னாலும் தெருக் கோடி பொட்டி கடையில் இருக்கும் எல்லா வார, மாத பத்திரிக்கைகளையும் வாங்கி வீட்டில் கடை பரப்பினான்.டிவி ரிமோட்டை பெரியம்மாவிற்க்கே தாரை வார்த்து கொடுத்தான்.விருந்தோம்பலில் தானும் சளைத்தவள் இல்லை என்பதாக ராஜியும் எப்பவும் போல் செய்யும் north /south indian ,chinese ,italian variety களோடு பெரியம்மாவின் salt free ,sugar free டயட்டுக்கு ஈடு கொடுத்து தனியாய் ஓட்ஸ் உப்புமா,ராகி கஞ்சி ,moong dal கிச்சிடி,soya கூட்டு, sprouts salad இன்ன மற்ற பிற வகையாய் நள பாகத்தில் அசத்தினாள் .சமையல்,கிளீனிங்,பசங்களின் homework ,hobby class routineக்கு நடுவே பெரியம்மா neglected ஆக feel செய்து துர்வாச ஸ்வரூபம் எடுக்காமல் இருக்க அவ்வப்போது பேச்சு கொடுத்த வண்ணம் இருந்தாள்.சனி,ஞாயிறு நாட்களில் அவன் nanny அவதாரம் எடுக்க,ராஜியும் பெரியம்மாவும் கோயில்,கச்சேரி,பீச் என்று பெரியம்மாவின் cervical spondylitis aggravate ஆகாத படிக்கு சொகுசாய் காரில் அலுங்காமல் குலுங்காமல் பவனி வந்தார்கள். போறாததற்கு அங்கெங்கு இலாதபடி எங்கும் நிறைந்திருக்கும் உறவினர்களுடன் பெரியம்மா ஆசைப் பட்டாள் என்று GMT , Eastern Time , Pacific Time என்று எல்லா நேரங் கெட்ட நேரங்களிலும் skype மூலம் அரட்டைக்கு வழி வகுத்தாள்.
என்னவோ பெரிசா குளம் வெட்டினார், மரம் நட்டார் அப்படின்னு அசோகர் ரேஞ்சுக்கு இருக்கேன்னு தோணறது இல்ல ...Expected Time of Departure வந்தபோது, "நாள் ஓடிப் போனதே தெரில்ல பெரிம்மா..இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு போயிருக்கலாம்.." என்றாள் ராஜி appraisalஇல் ஒரு ஆப்பும் இருக்காது என்ற நம்பிக்கையுடன்.
"நானும் இருந்துட்டு போலாம்னுதான் நெனச்சேன்..ஆனா என்ன செய்யறது..முள்ளு மேல நிக்கறா மாதிரின்னா ஆயுடுத்து..."என்றவளை அதிர்ந்து பார்த்தாள் ராஜி.
"சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத.." disclaimer உடன் ஆரம்பித்தது appraisal report
"என்ன குடித்தனம் குடித்தனம் பண்ற..ஒரே தூம்ர தண்டி ..என் ஒருத்திய கூட்டிண்டு போக இவ்ளோ பெரிய கார் நான் கேட்டேனா..பெட்ரோல் விக்கற விலையிலே இந்த ஷோக்கெல்லாம் தேவையா..ஒனக்கோ நிக்க பொழுதில்ல..இந்த அழகில பேப்பர் காரனுக்கு போடறதுக்குன்னே இத்தனை magazines வாங்கணுமா ..பசங்களுக்கு வகையா வாய்க்கு ருசியா செய்ய வேண்டியதுதான். அதுக்காக இப்டி ஹோட்டல் மாதிரியா? மெனு கார்டு போட்டு பில் குடுக்காதது தான் குறை...அமெரிக்காவா என்ன..kumon class ,பால விஹார் க்ளாஸ் எல்லாத்துக்கும் நாமளே போய் விட்டு அழைச்சிண்டு வரணும்னு..( all expenses paid trip ஆக நான்கு மாதம் முன்னால்தான் Bay Area வில் இருக்கும் தம்பி பையன் வீட்டில் டேரா போட்டு திரும்பியதன் hangover ) ஒனக்குதான் homework மாதிரி நீயும்னா பசங்களோட அல்லாடற..என்ன spoon feeding கோ...படிச்சவதானே..don 't be a banyan tree அப்படீன்னு கேள்விப் பட்டதில்லையா...ஏதோ ஆசையா நாலு நாள் இருக்கலாம்னு வந்தா ஒனக்கு நேரமே இல்லாம நான் டிவியே கதின்னு இருக்கும்படின்னா ஆச்சு..ம்ஹூம்...என்னவோ போ..."
மூச்சு விடாமல் பேசி கடைசியாய் பெருமூச்சு ஒன்று exhale செய்து நிறுத்தினாள் பெரியம்மா. Smelling Salt ஐ inhale செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டிருந்த ராஜியின் காதுகளில் பையனின் குரல் கிணற்றிலிருந்து வருவது போல் கேட்டது.."Damned if you do , damned if you don 't , அப்படின்னா என்னம்மா..".
Viji,
ReplyDeleteThanks to Matha, I went thro' your blogs "பெருமூச்சு பெரியம்மா ;; , could not help appreciating the humour. As I was reading I was imagining the whole thing like I was watching a drama or a serial in front of me and how true people do not seem to appreciate your efforts ,time and concern that you shower on them in your anxiety to please them and make them comfortable and flippantly trivialise all that you have done sacrificing your family comforts hurting your sentiments respecting their age and the relationship.I truly stand by what mathangi has written and in the second part''."Damned if you do , damned if you don 't , '' precisely describes the whole episode.
I am so happy that reading this post was a memorable one for me!
bhuvana