Monday, August 11, 2014

பொக்கிஷம் - பாகம் 1

விடுமுறை நாட்களின் மதிய வேளையில் திடீரென்று என் மூத்த சகோதரிகள் இருவரும் காணாமல் போய் விடுவார்கள். தேடிப் பார்த்தால் ஸ்டோர் ரூமின் தரையில் பாய் விரித்து ஒரே தலையணையில் தலை சாய்த்து தோளோடு தோள் உரசி ஒரு மோன நிலையில் ஒரே புத்தகத்தில் இருவரும் லயித்து இருப்பார்கள். ஒருத்தியின் வலது கையும் மற்றவளின் இடது கையும் நகக் கடிப்பில் engage ஆகி இருக்க ஒரு கை புத்தகத்தை பிடித்திருக்க மற்றொரு கை பக்கங்களை திருப்ப என்று ஜுகல் பந்தி  போல் வாசிப்பு நிகழும். ஒருத்தி படித்து முடிக்கும் வரை   காத்திருந்து பின் தான் படிக்கலாம் என்று விட்டுக் கொடுக்கும் மன நிலையில் இருவருமே இருந்தது இல்லை.

மழை வெளுத்துக் கட்டும் நாட்களில் வெளியே விளையாட முடியாமல் வீட்டுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் வேளைகளில் ஸ்வாரஸ்யமான ஒரு வினாடி வினா எங்களுக்குள் நடக்கும். ஒரு அத்தியாயத்திற்கு வரைந்திருக்கும் illustration ஐ மட்டும் பார்த்து அந்த அத்தியாயத்தின் தலைப்பு என்ன? என்று ஊகித்து சொல்ல வேண்டும். அதில் எப்பொழுதும் fair and square ஆக எங்களை தோற்கடித்தது என் அண்ணன்தான். அப்படி ஒரு elephantine memory அவனுக்கு அந்த ஒரு விஷயத்தில் மட்டும்.

" யாரைக் கேட்டுண்டு இப்படி பண்ணினே? ஒரு வார்த்தை just ஒரு வார்த்தை என்கிட்டே சொல்லி இருந்தா நான் வந்து எடுத்துண்டு போய் இருப்பேனே.....அது என்ன கேட்டது காசா பணமா..?", கோபமாய் கத்தினாலும் அழுகையில் முடிந்தது என் ஆற்றாமை. Family heirloom மாதிரியான ஒரு பொக்கிஷத்தை பழைய பேப்பர் காரனுக்கு எடைக்குப் போட இவனுக்கு எப்படி மனசு வந்தது..? இத்தனைக்கும் எங்கள் எல்லாரையும் விட அதை இவன்தானே விழுந்து விழுந்து மனப் பாடம் செய்தான்...அடக்க முடியாமல் புலம்பிய என் மேல் பரிதாபப் பட்டு அவன் குட்டை போட்டு உடைத்தாள்  புதிதாய் திருமணம் ஆகி வந்திருந்த அவன் மனைவி, என் மன்னி.
" அவர் சும்மா உங்களை சீண்டி பார்க்கிறார்......எல்லாம் பத்திரமாய் பரணை  மேலே பழைய trunk பொட்டியிலே இருக்கு. அதுக்கு இடம் வேணும்னே அம்மாவோட பித்தளை வெண்கல பானை,வாணலி எல்லாத்தையும் தூக்கி எடைக்குப் போட்டுட்டார் தெரியுமா..."

அப்பாடி, போன உயிர் திரும்பி வந்தது. சின்ன வயசிலே இருந்து என்னை சீண்டி அழ விட்டு வேடிக்கை பார்த்து  அப்புறம் நிதானமாய் சமாதானம் செய்வது பழகின சமாச்சாரம் தான் என்றாலும் இப்படியா என் வீக் பாயிண்ட் பார்த்து அடிப்பான் ஒருத்தன்....இருக்கட்டும்...அழுது ஆகாத்தியம் பண்ணி பொறந்தாத்து சீதனமாய்  ஒரு நாள் பிடுங்கிண்டு போகலே...என் பேரு ​​​​ ____ இல்ல...அடடா என்னதான் அந்த பூர்வீக சொத்து என்கிறீர்களா...கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' என்கிற சரித்திரக் காவியம்தான் அது.

2 comments:

  1. விஜி, ரொம்ப நல்லா நேர்த்தியாய் எழுதி இருக்காய் .

    நீ யாரைச் சொன்னாய் என்று தெரிந்தது, நகம் கடிக்கும் பழக்கம் எனக்கும் புவனாவுக்குமே உரித்தான ஒன்று. அந்தப்பழக்கம் என்னை விட்டு எப்படிப் போச்சுன்னு எனக்கேத் தெரியாது! நீ சந்தோசப் படவேண்டிய விஷயம் என்னன்னா நல்ல காலம் நாங்கள் படிக்கும் சூடில் மற்றொருவர் கை நகத்தைக் கடிக்காமல் விட்டது தான் ! அவ்வளவு விறுவிறுப்பு , என்னவோ Sherlock Holmes புக் படிக்கறா மாதிரி.


    ''ஒருத்தி படித்து முடிக்கும் வரை காத்திருந்து பின் தான் படிக்கலாம் என்று விட்டுக் கொடுக்கும் மன நிலையில் இருவருமே இருந்தது இல்லை. உனக்கு ஏன் என்றேத் தெரியலை, கதை நல்ல சுவாரசியமாகப் போய்க் கொண்டிருக்கும் போது பொறுமையா, எருமையா, விட்டுக் கொடுக்கறதா, போட்டுக் கொடுக்கறதா''' nothing like that so much engrossed in the story that ... it 's more of what's happening next.

    Regarding memory, Guha used to say the dialogues and the sequence of events,... The discussion had taken us to find out who has memorized the dialogues, and which chapter, which drawing and the position of it on the page, ... right corner, left half in the centre......

    The best part is to get a hint from the chapter's sketches to decide what the chapter 's content going to be. Every one invariably enjoyed பழுவேட்டரையன் and ஆழ்வாரக்கடியான் .யாரு அந்த ஒத்தன்னு ஒவ்வொரு முறையும் யோசிச்சு, யோசிச்சு ,,,.. அப்பா..................
    ''
    அப்பாவிற்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்ததா என்று தெரியாது, ஆனால் அம்மா had read a lot and I remember she had some issues of them I do not remember the name Hotel Belvodere?../Beverley Hills..? . i am not sure.....but she never forced us to read,, it was somewhat inherited ... எனக்குத் தெரிந்ததெல்லாம் word building விளையாட்டுத் தான்.

    அம்மாவோட பித்தளை வெண்கல பானை,வாணலி எல்லாத்தையும் தூக்கி எடைக்குப் போட்டுட்டார் தெரியுமா..."we can easily make out what was the most important treasure for us those days. நீ எழுதினதும் தான் எனக்கு அந்தப் பித்தளைப் பாத்திரம் கை மாறியது தெரிந்தது, இன்னும் என்னக் குட்டெல்லாம் வெளியாகப் போகிறதோ நீ எழுதப் போவதில் ,தெரியலை.?

    அந்தக் காலத்தில் இப்ப மாதிரி பொழுது போக்குக்கு டிவியோ, மொபைல் போனோ கிடையாது. புத்தகம் ஒன்றே நமக்கு நல்ல இணையற்ற நண்பன், அதற்கு ஏற்றாப்போல லைப்ரரி பக்கத்திலேயே அமைந்தது மிகப் பெரிய வரப் பிரசாதம்! அதுவும் கார்த்தாலை ஒரு புஸ்தகம் வாங்கி மத்யானம் லஞ்சுக்குள்ளேப் படித்து திரும்ப மத்யானம் போய் வேற புஸ்தகம் வாங்கி அடுத்த நாளுக்குள்ளே படிச்சு, .. அப்பப்பா படிக்கற பழக்கத்துக்கே ஒரு நடமாடும் உதாரணங்கள் நாம் தான் இருக்கும் அந்தக் காலத்தில்!

    அப்பாவும் கல்கி, ஆனந்தவிகடனை படிக்க அனுமதிக்காவிட்டாலும் பொன்னியின் செல்வன் படிப்பதை தடுக்கலை.

    நம்மள் எல்லாரோட புக்ஸ் mainly novels எல்லாம் 1 home road அலமாரியில் லைப்ரரி போல வைத்திருந்தோம். பின்னாடி சாஸ்திரி நகர் வந்தப் பிறகு நான் என்னுடையப் புத்தகங்களை எடுத்துக் கொண்டுப் போகாலாம் என்றுக் கேட்ட போது, '' I am not sure whether it was you or krishna, the reply was all the books have gone to adorn the Chinmaya Mission library''.

    Imagine my plight and helplessness, I had 12 novels all abridged versions in my PUC and apart from that like Kalki's ponniyin selvan, in English I had 'Wuthering Heights 'by Emily Bronte, and' Emma 'by Jane Austin. These are my favourites. Like Vandiyathevan, I liked Heathcliff's character and I fell in love with this character. Finally after a year or so I could hunt for these two books of mine and now I have lost them . I gave it to one of my friends and she never gave them back. :~(

    ஆனா ஒன்னு சொல்லனும் விஜி, இன்னி வரைக்கும் புஸ்தக பொக்கிஷம்னா அது உனக்கே, உன்னைச்சார்ந்தது மட்டுமே.நீ தான் இன்னும் புஸ்தகங்களைக் கட்டிப் பாதுகாத்து வருவதோடல்லாமல், படித்துக் கொண்டும் இருக்காய், எங்களுடன் பகிர்ந்துக் கொளளவும் செய்கிறாய்.

    ReplyDelete
  2. Aunty, உங்கள் கட்டுரை மற்றும் பதில் கருத்துகளைப் படிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. பொன்னியின் செல்வன் The Spy's Trail சுற்றுப்பயணத்தில் நாம் அனுபவித்த தருணங்களை நான் எப்போதும் நினைத்து மகிழ்வதுண்டு. பொன்னியின் செல்வன் நம் முன்னோர்களைப் பற்றி அறிய தூண்டுகிற ஒரு அற்புதமான பாதையை வகுக்கிறது. உங்களுடைய அருமையான நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி.. மீண்டும் உங்கள் இருவரையும் சந்திக்க ஆவலாக உள்ளது. Chennai வந்தால் அவசியம் சொல்ல வேண்டும், மீண்டும் சந்திப்போம்.. by Santhiya Karthikeyan.

    ReplyDelete