கேவலம், இட்லிக்கு வந்த வாழ்வை பார்த்தியா...இதெல்லாம் ஒண்ணுமே இல்ல.ஆனானப்பட்ட நா.பா. அதான் எழுத்தாளர் நா .பார்த்தசாரதி அவர்கள் வெண்பாவே இயற்றி இருக்கிறார் தெரியுமா? அவரோட 'சத்திய வெள்ளம்' என்கிற கதையில் இரண்டு மாணவர்கள் இயற்றுவது போல் வரும் அந்த வெண்பாக்கள்...
"மங்காப் புகழ் படைத்த மல்லிகைப் பந்தலினிற்
சங்கர்பவன் தரும் சாம்பாரும் - வெங்காயச்
சட்டினியும் இங்கிருக்க ஏழுலகில் தேடிடினும்
இட்டிலிக் குண்டோ இணை"
"வட்ட நிலாப்போல் வாகான இட்டிலியும்
தொட்டுக்கொள் தொட்டுக்கொள் என்றழைக்கும்-இட்டமுள்ள
சட்டினியும் சேர்ந்திருக்கும் இந்நிலையில் இவ்வுலகில்
இட்டிலிக் குண்டோ இணை"
நம்மைப் போல் சாதாரண மக்கள் வெண்பாவெல்லாம் எழுத முடியாதுதான். ஆனாலும் நாமும் லேசுப் பட்டவர்கள் இல்லையாக்கும்! நாள், கிழமை என்றால் வீட்டில் கோலம் போடுகிறோமோ இல்லையோ, பகவானுக்கு பூஜை செய்கிறோமோ இல்லையோ, படையல், நைவேத்யம் என்கிற பெயரில் நம் வயிற்றுக்கு நல்லாவே பூஜை செய்வோமே,நாமெல்லாம் யாரு....?
நீங்களே வேண்டுமானால் ரூம் போட்டு யோசியுங்கள்..
ஆடி மாசமாச்சே , அம்மனுக்கு கூழ் வார்த்தியா?
விநாயக சதுர்த்தியா , கொழுக்கட்டை பண்ணியா..
ராம நவமியா, கொண்டா பானகமும் நீர் மோரும்..
சத்ய நாராயண பூஜையாமே? மா விளக்கு போட்டியா?
கார்த்திகைக்கு அவல் பொரி , அரிசி பொரி ரெண்டுலயும் உருண்டை பிடிச்சியா (இல்லைன்னா சாமி வேலாலே கண்ணா குத்திடும்)
கிருஷ்ண ஜெயந்தியா- வெறும் அவலும் வெண்ணையும் வெச்சா போறும் ...சின்ன கொழந்தைதானே...ஈஸியா முடிச்சிடலாம்.
லக்ஷ்மி பூஜையா- பணம் கொடுக்கற தெய்வம் ஆச்சே...சும்மா வெறும் கையாலே மொழம் போடலாமா? சக்கர பொங்கல், வடை, சுண்டல், இட்லி,கொழுக்கட்டை, பாயசம்னு அசத்த வேண்டாமா...?
பொண்ணுக்கு சடங்கா- புட்டு செஞ்சியா...
பொண்ணு பார்க்க வராங்களா-சொஜ்ஜி, பஜ்ஜி ரெடியா...
இப்பவே கண்ண கட்டுதே ...கிறு கிறுன்னு தல சுத்துதே...கொஞ்சம் சோடாவ ஒடைச்சு ஊத்தறீன்களா ..ஐயா! 'Sprite ' ஆ இருந்தா இன்னும் better ...உங்களுக்கு புண்ணியமா போகும்...