Thursday, September 25, 2014

சோறு கண்ட இடமே சொர்க்கம் ! வயிறே வைகுண்டம்!- Part 1

தயவு செய்து காலி வயிற்றில் இந்த post ஐ படிக்காதீர்கள். சொன்ன பேச்சை கேட்காமல் மேலே படித்தால், அப்புறம் பசி மிஞ்சிப் போய் பித்தம் தலைக்கு ஏறி மயக்கம் வந்து, சிறு குடலை பெருங்குடல் தின்னும் நிலை ஏற்பட்டு, acidity வந்து வயிறு புண்ணாகி ulcer முத்திப்போய் ...ஏன் விஷப் பரீட்சை..? சட்டுன்னு போய் பழைய சாதத்தில் மோர் விட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து கரைச்சு குடிச்சு விட்டு வந்தீங்கன்னா வயிறும் குளிரும், பசி வந்து பத்தும் பறந்து போகாமலும் இருக்கும்.

அப்படி என்ன பழைய சோறுக்கு பெரிய recommendation வேண்டியிருக்கு என்று கேட்கிறீர்களா...பழைய சோறு, நீராகாரம் இதிலெல்லாம் வைட்டமின் நிறைந்து இருக்கு என்று கேள்விப் பட்டதில்லையா ..போனால் போகட்டும், தொடர்ந்து படியுங்கள்...'சேர்ந்தே இருப்பது?'என்று திருவிளையாடல் தருமி போல் என்னிடம் கேட்டீர்கள் என்றால் ஹனுமார் வால் போல் பெரிய லிஸ்ட் வைத்து இருக்கிறேன்.  உதாரணத்திற்கு சில-

வத்தக் குழம்பு-சுட்ட அப்பளம் 
பீன்ஸ் உசிலி-வெண்டைக்  காய் மோர் கொழம்பு 
உருளை ரோஸ்ட்-எலுமிச்சை ரசம் 
மிளகு ரசம்-தேங்காய் சேர்த்த கோஸ் பொரியல் 
பிஸி பேளா பாத்-ஜவ்வரிசி வடாம் 
தயிர் சாதம்- வடு மாங்காய், மோர் மிளகாய்.

என்ன, நாக்கில் எச்சில் ஊறுகிறதா ..இத, இத, இதத்தான் நான் எதிர் பார்த்தேன். இந்த item எல்லாம் made  for  each other ஆக்கும்! சென்னை பாஷையில் சொல்வதென்றால், சான்ஸே இல்ல, இல்ல,சான்ஸே இல்ல!

அடடா, நல்ல சாப்பாட்டு ராமனிடம் வந்து மாட்டிக் கொண்டோமே என நினைக்க தோணுகிறதா....ஆமா, சீதா /ஜானகி/கல்யாண/கோதண்ட/வெங்கட் ராமன் தெரியும். அது என்ன சாப்பாட்டு ராமன்? இந்த காரணப் பெயரின் etymology தெரிந்தவர்கள் ஆதாரத்துடன் சமர்ப்பித்தால் nala 's ஆப்பக்கடை வழங்கும் ரூபாய் 2000 மதிப்புள்ள ஒரு gift coupon இலவசமாய் அளிக்கலாம். அப்புறம் குஷ்பு இட்லி, குஷ்பு இட்லி என்கிறார்களே, எந்த ஓட்டலிலாவது மெனு கார்டில் குஷ்பு இட்லி என்று பிரிண்ட் செய்து இருந்தால், அந்த ஓட்டல் சொந்தக் காரரின் ஜன்மம் சாபல்யம் ஆக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். 

3 comments:

  1. லிஸ்டைப் படித்துவிட்டு வயிறு வைகுண்டம் இல்லை, ஹோமகுண்டம்!! தா தான்னு கேட்கிறது. நீ சமைச்சு போடறியா?

    -J

    ReplyDelete
  2. உருளை கிழங்கு ரோஸ்டு - எலுமிச்சை சாதம்,
    கத்தரிக்காய் எண்ணை கரி- மோர் கொழம்பு,
    தாயி சாதம்- மிளகு குழம்பு
    உருளை கிழங்கு ரோஸ்டு - வெங்காயம் இல்லை முருங்கக்காய் சாம்பார்
    குலாப் ஜாமூன்- ஐஸ்க்ரீம்
    அடை அவியல்,
    தேங்காய் பொரிச்ச கூட்டு, சுட்ட அப்பலாம் , மனத்தக்காளி வத்தக் குழம்பு கணக்கில் இல்லையா ?

    ReplyDelete
  3. Namballukku, ippi pazhaya soru Daan sorgham

    ReplyDelete