Sunday, December 21, 2014

அவசர உதவிக்கு.....

அவள் விகடன் 16.12.14 இதழ் பக்கம் 88. தலைப்பு " விஷக் கடிகளுக்கு வீட்டு வைத்தியம் ":-

Quote:

பல்லி கடித்தால் அவுரி இலை மற்றும் அதன் வேர் ஆகியவற்றை 50 கிராம் எடுத்து, 500 மில்லி தண்ணீரில் போட்டு 100 மில்லி அளவுக்கு சுண்டும் வரை காய்ச்சி தினமும் 25 மில்லி வீதம் 4 நாட்கள் குடித்து வந்தால் விஷம் குறையும்.

தேனீ,குளவி கொட்டினால் மாங்காய் காம்பில் இருந்து வழியும் பாலை கடிவாயில் தடவினால் விஷம் இறங்கும்.

அரணை கடித்தால்/நக்கினால்  சீமை அகத்தி இலையை விழுதாக அரைத்து தேங்காய் எண்ணையில் குழைத்து ....

கரிசிலாங்கண்ணி இலையை ஆட்டுப்பாலில் அரைத்து கொடுத்தால் விஷக் கடியால் ஏற்படும் வலி குறையும்.

Unquote 

இவ்வளவு விளாவரியாக உபாயம் சொல்பவர்கள், கூடவே சில விஷயங்களையும் தெளிவு படுத்தினால் புண்ணியமாகப் போகும்...

அவுரி இலை என்பது 'common parlance 'ல் என்ன? அந்த தாவரம் எந்த நர்சரியில் வாங்கி வளர்க்கலாம்? இல்லை ஏதாவது நாட்டு மருந்து கடையில் இந்த இலையும் வேரும் கிடைக்குமா? BTW , பெரு நகரங்களில் கூட இந்த வகை கடைகள் தமிழ் சினிமாவில் தமிழ் தெரிந்த கதாநாயகிகள் போல் அரிது, அரிது என்று இருக்க, எங்கேயிருந்து source செய்வது?

அப்படியே 'ready to use ' நிலையில் வீட்டில் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம்..Weighing Scale உம் ( நாம weight பார்க்கற machine இல்லங்க..), measuring cup உம் இருக்கும் பட்சத்தில் ,500 மில்லி அண்டக் காய்ச்சி 100 மில்லி ஆகும் வரை காத்திருந்து பின் அந்த 100 மில்லியை ஒரு நாளுக்கு 25 மில்லி வீதம் 4 நாட்களுக்கு (கணக்கில் இவர்கள் சூரப்புலிகள்தான் என்பதில் இம்மியளவும், sorry sorry 10 மில்லி அளவு கூட ஐயம் இல்லை) சாப்பிட்டு முடிக்கும் வரை விஷம் ஏறி வாயில் நுரை தள்ளி ....யாராவது இந்த விஷப் பரீட்சையை I mean இந்த வைத்தியத்தை செய்து validate செய்து இருக்கிறார்களா?இருக்கட்டும் இருக்கட்டும்...அந்த பல்லி என்னைக் கடிக்கதற்க்கு முன்னாடி நான் அதை.....விரட்டி விட்டுத்தான் மறு காரியம் .

குளவி கொட்டினால் மாங்காய் காம்பில் வடியும் பாலை தடவி....
ஆமா, பாரதியின் நந்தலாலா போல் பார்க்கும் மரங்கள் எல்லாம்....மாமரமா என்ன? இல்லை மாங்காய்தான் ஆல் சீசன் காயா?

சீமை அகத்தி இலை ....சாதாரண அகத்தியே துவாதசி திதியில்தான் காய்கறி மார்க்கெட்டில் கிடைக்கும்....இதிலே சீமை variety எப்படி இருக்கும்/கிடைக்கும்? ஆகவே அரணை நக்கவோ கடிக்கவோ முற்பட்டால் துவாதசி திதிகளில் மட்டும் அவ்வாறு நிகழ்வக் கடவது என்று எல்லாம் வல்ல இறைவன் அருள்வாராக!

'தேடித் தேடித் தேய்ந்தேனே' என்று ARR இசையில் ஒரு பாட்டு வருமே...நிஜமாகவே அந்த  கரிசிலாங்கண்ணி இலையையும் ஆட்டுப் பாலையும் தேடித்தான் தேய்ஞ்சு போயிருக்கணும். ஏன் சொல்கிறேன் என்றால் , பேப்பர் காரனிடம் நாளையிலே இருந்து ஹிந்துவோட Times of India பேப்பரும் போடுன்னு சொல்றாப்பல ,பால் பாக்கெட் போடும் பையனிடம் நாளையிலேர்ந்து அரை லிட்டர் ஆட்டுப் பால் சேர்த்துப் போடுன்னு சொல்லித்தான் பாருங்களேன்...ஆனாலும்  நாமும்  அந்த ஐயப்ப சாமியும் புலிப் பாலும் போல எங்கேயாவது ஆட்டுக்கார அலமேலு ஆட்டுப் பண்ணை இருக்கான்னு தேடி முயற்சி செய்து பார்க்கணுங்க ...பின்ன விஷக் கடியால வந்த வலி குறையணுமா வேண்டாமா?

2 comments:

  1. Hilarious!

    Sounds like KoLLu pAtti’s “Kai Vaithyak KuRippugaL” . They just cut & pasted it without a reality check nor did they bother explaining the botanical & common names & availability. Maybe chumma tamashukku publish pannirukkanga pola irukku.

    I remember from my childhood days that edhir veetu pAtti did eRakkufy my poochikkadi with vibhooti & mantra. My mom did mention (hearsay) that at one time in her village somebody who was bitten by a jellyfish (!) had ballooned in size & he was restored to his normal size through mantra & don’t remember about pacchilai. Snake & scorpion bites too had their mantra & herbal treatment. Did these things really work? Can anybody verify?

    ReplyDelete
  2. A Hilarious one definitely to be read by those who are stung so that they forget the pain.

    இந்தக் காலத்துல தொவரம் பருப்புக்கும், பயத்தம் பருப்புக்குமே வித்யாசம் தெரியாம இருக்கப் போ, சீம அகத்தியும்,ஆட்டுப்பாலும் எங்கிருந்து கிடைக்கும்? அப்படியே கொண்டு வந்தாலும், அது ஆட்டுப் பால் தான்னு certify பண்ண any takers?.these posts are just to fill the pages, otherwise they could have published the photographs for the lay men and also where to get them.Who would like to take risk by doing home remedies when your life is at risk? In the world of '' all ready'',everyone likes to have an instant cure.

    ReplyDelete