Monday, March 30, 2015

ஞாபகம் வரல்லையே , ஞாபகம் வரல்லையே

தினம் சொல்ற ஸ்லோகம்தான் என்னமோ தெரியலே இன்னிக்கு பாதியிலே மறந்து போச்சு!
சாயந்தரம் officeலேயிருந்து திரும்பி வரப்போ colony வாசல்ல இருந்த கடை முன்னாடி ஸ்கூட்டர நிறுத்திட்டு கொஞ்சம் சாமான் வாங்கிண்டு வண்டிய அப்படியே மறந்து போய் கால்நடையா வீட்டுக்கு திரும்பி வந்திருக்கேன், can you believe it?
இப்படித்தான் அன்னிக்கு முக்கியமா ஒரு விஷயம் விசாரிக்கணும்னு அக்காவுக்கு போன் பண்ணிட்டு எதுக்காக கூப்பிட்டோம்னே மறந்து போச்சு!
பையனும் ஒரு மாசமா போன் பண்ணி சொல்லிண்டு இருக்கான் 30ம் தேதி night land ஆவேன்னு. Calendarல குறிச்சு வெச்சும் மறந்து போய் திருப்பி திருப்பி எப்போன்னு யோசனையா இருக்கு…
இதெல்லாம் ஒண்ணுமே இல்ல, சாமான் லிஸ்ட purseல ரொம்ப ஞாபகமா வெச்சுண்டும் கடையிலே போய் எதையோ வாங்கிட்டு, purse திறந்து பணம் குடுத்தப்போ கூட  அந்த லிஸ்ட வெச்சது ஞாபகம் வரல்லைன்னா என்ன சொல்ல?
இப்படி ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல? மேலுக்கு கஜினி சூர்யா மாதிரின்னு சிரிச்சாலும் உள்ளுக்குள்ளே பயமா இருக்கு எங்கே Alzheimer ல கொண்டு போய் விட்டுடுமோன்னு…
நானும் உங்களை மாதிரிதான்… ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூட ஆப்சென்ட் மைண்டட்தானாம் தெரியுமா …ஆனால் நீங்கள் சொல்றா மாதிரி உள்ளுக்குள்ளே ஒதறல்தான். Pre Occupation, absent mindedness, memory loss, amnesia, call it what you will, is it here to stay? மருத்துவர்களும் அறிஞர்களும் என்ன சொல்வாரோ அறியேன் but I have devised some interesting ways to keep my cells exercised-some may find it plain silly, but what the heck … So here I go..
Solve crossword puzzles- சிவாஜி வாயிலே ஜிலேபி எல்லாம் இதில் சேர்த்தியில்ல.
Solve Sudoku- சொடக்கு இல்ல Sudoku the number puzzle.
Write at least 5 lines with the other hand.
At least alphabets A to Zஅ mirror image மாதிரி எழுதிப் பார்க்கணும் .
Walk backwards-only within the safe confines of my home, that too with prior intimation to all inmates ( reverse action too has more than equal and opposite reaction- இது என்னோட அனுபவத்துல நான் கண்ட fourth law of motion).
வெட்டியா இருக்கற சமயங்களில் இப்படியெல்லாம் ஒரு வினா விடை track நமக்கு நாமே ஓட்டிக்கலாம்-
கமல் ரஜனி ஜோடி எத்தனை சினிமாவிலே நடித்திருக்கிறார்கள் ?
ரஜனி ஸ்ரீதேவிக்கு சகோதரனாய் நடித்த படம் எது?
தமிழ் சினிமாவில் பெண் பார்க்கும் படலம் வரும் சீனில் பாடல்கள் என்னென்ன?
நாயகனோ நாயகியோ இசைக் கருவி வாசிப்பதாய் வரும் பாடல்கள் எவை?
ஊர்திகளில் பயணம் செய்வது போல் வரும் பாடல் காட்சிகள் எவை?
Slow motion வரும் பாடல் காட்சிகள் எவை?
மலர் என்று தொடங்கும் பாடல்கள் , ஏதோ ஒரு எண்ணுடன் தொடங்கும் பாடல்கள், ஏதோ ஒரு நிறத்தின் பெயரில் தொடங்கும் பாடல்கள்,அல்லதோ ஆங்கில வார்த்தைகள் இடையில் வரும் பாடல்கள் …
சினிமாவின் டைட்டில் பாடலின் வரியிலே வரும் பாடல்கள், carnatic ராகங்களில் அமைந்த பாடல்கள், தமிழ் ஹிந்தி இரண்டிலும் ஒரே tuneல் அமைந்த பாடல்கள்…
Dream sequence பாடல்கள், மொட்டை மாடி/கார்டன்/hill station/பீச்/historical sites/ foreign locations போன்ற இடங்களில் படம் பிடித்த பாடல்கள்…
ஆனால் இவை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் ஒரு activity என்ன சொல்லவா…நீங்களே by now guess செய்திருப்பீர்கள்..yes, you are absolutely correct! Google mailல் பாஷை மாத்தி மாத்தி டைப் செய்வதுதான் அது!

No comments:

Post a Comment