Showing posts with label rasanai. Show all posts
Showing posts with label rasanai. Show all posts

Friday, August 1, 2014

பாட்டு பாடவா‏

கேபிள் டிவியில் channel லுக்கு ஒன்றாய் சினிமா பாட்டுப் போட்டிகள்.தமிழ் சேனல்கள்தான் என்றாலும், பாடுவது தமிழ் பாடல்கள்தான் என்றாலும் நிகழ்ச்சியின் பெயர் என்னவோ ஆங்கிலத்தில்தான்-சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர், சன் சிங்கர், ஐடல் இத்யாதி..சினிமாவில் பாட சான்ஸ் கிடைத்ததோ இல்லையோ, ஜட்ஜ் சீட்டில் அமர சில பேருக்கு சான்ஸ் இருக்கத்தான் செய்கிறது.
மலையாளமும், தெலுங்கும் தாய் மொழியாக இருந்தாலும்,அக்ஷர சுத்தமாகப் பாடும் போட்டியாளர்கள். படித்தவனோ பாமரனோ,அனுபவித்து பாடும் போட்டியாளர்கள்.Amazing array of talent on display .

Fy ,fy ,fy ,கலக்கி fy ,சொதப்பி fy /daddy mummy வீட்டில் இல்ல/அட்றாரா நாக்க முக்க -போன்ற கருத்துச் செறிவு நிறைந்த தேனொழுகும் பாடல்களுக்கு நடுவே  danger zone ல்   hit  or  miss situation ல் , ஆதிமூலமே! என்று கஜேந்திரன் அறை  கூவல் விடுத்த கதையாய் , 'மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி' என்று ஹிந்தோளத்தையும் 'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது' என்று ஆஹிர் பைரவியையும் துணைக்கு அழைக்கும் பொழுது போன தெம்பு திரும்பி வரத்தான் செய்கிறது- ரசனை இன்னும் அதள பாதாளத்திற்கு போகவில்லை, still there is redemption என்று.

P S: Jay corrects me and I stand corrected- It's raag Chandrakauns and not Hindolam.

Thursday, July 10, 2014

பாட்டும் பாடல் காட்சியும்

நம் ஊர் சினிமாவில் கதையம்சம் இருக்கிறதோ இல்லையோ, பாடல்களும் பாடல் காட்சிகளும் de rigueur என்பது எழுதப்படாத விதியாகவே இருக்கிறது. If there's any one tamil movie that justifies the song and dance sequence , 'தில்லானா மோகனாபாள் ' it is all the way ..ஏனென்றால் நாயகன் நாதஸ்வர வித்வான்,நாயகி பரத நாட்ய நங்கை .இசையும் ஆடலும் பின்னிப் பிணைந்த கதை.

இருவருக்கும் இடையே உன் கலை பெரியதா என் கலை பெரியதா என்று மோதல்.ஆனால் அந்த போட்டி மனப்பான்மையையும் மீறி பரஸ்பரம் மரியாதை, ஈர்ப்பு, காதல்..

பாடல்: மறைந்திருந்தே பார்க்கும் மருமம் என்ன?

காட்சியின் பின்புலம்: கோவிலில் நாயகன் சிக்கல் ஷண்முக சுந்தரத்தின் நாதஸ்வர கச்சேரி முடிவடைந்து மறு நாள் அவர்கள் கோஷ்டி ஊர் திரும்புகிறார்கள். அதே கோவிலில் அன்று இரவு நாயகி மோகனாம்பாளின் நாட்டியம் நடக்க இருக்கின்றது. நாயகனிடம் தன்னுடைய நாட்டியத்தைக் கண்டு களித்து விட்டு செல்லும்படி கோரிக்கை விடுக்கிறாள் நாயகி.என்னதான் உலகமே பாராட்டினாலும், மற்றொரு கலைஞனின் அங்கீகாரம் என்பது icing on the cake அல்லவா? உள்ளுக்குள் கொள்ளை ஆசை இருந்த போதிலும் மிடுக்காக மறுக்கிறான்,தன்னுடைய சகாக்களுக்கும் தடை விதிக்கிறான் ஷண்முக சுந்தரம்.அன்று இரவு அவன் உறங்கி விட்டான் என்று எண்ணி அவன் சகாக்கள் நாட்டியத்தைக் காண எழுந்து போய் விடுகிறார்கள்.அவனும் ரகஸியமாக ஒரு தூணின் மறைவில் இருந்து ஆடலைக் காண முற்படுகிறான்.

பாடல் காட்சி: 

மேடையில் இருக்கும் மோகனாம்பாள் அவன் திருட்டுத் தனமாக தன்னையும் தன ஆடலையும் ரசிக்க விழைகிறான் என்று அறிந்து பெருமை கொள்கிறாள்.'அப்படி வா வழிக்கு' என்று ஒரு சின்ன மமதையும் கூட..பாடல் வழியாகவே அவனை விளித்து,தான் அவன் ரகசியத்தை அறிந்து கொண்டாள் என்று சீண்டுகிறாள்.

      மறைந்திருந்தே பார்க்கும் மருமம் என்ன-அழகர் 
      மலை அழகா இந்தச் சிலை அழகா என்று..?

அவன் பால் தனக்கு இருக்கும் மதிப்பையும், காதலையும் அவன் மேல் தன ஆளுமையையும் பாட்டின் வழியாகவே வெளிப் படுத்துகிறாள்.

       எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்-உன்னை 
       என்னை அல்லால் வேறு யார் அறிவார்...?

As a woman she is aware of his interest in her and that his male ego will never let him profess it to her. As an artist she realizes  the only way to break him in ,so to say ,is by challenging his vidwatvam .

        பாவை என் பதம் காண நாணமா-உந்தன் 
        பாட்டுக்கு நானாட வேண்டாமா...?

Padmini, the consummate bharat natyam dancer she is, is the only one imo,who could've done justice to the role and the dance sequence.Her abhinayams-'நவரசமும்..மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்..' 'உந்தன் பாட்டுக்கு நானாட வேண்டாமா?' just to cite a few ; her swift adavus and the excellent choreography making her use the entire stage ( some cinematic liberty is seen with the movements for மோஹத்திலே என்னை மூழ்க வைத்து.. but that can be excused for mass appeal)prove how she   totally deserves the அடை மொழி 'நாட்டியப் பேரொளி' .Through this movie she establishes  she's a classical dancer first and a film actress only next.


இப்பொழுது நாயகன் சிக்கல் ஷண்முக சுந்தரத்திடம் வருவோம்.நாதஸ்வரம்  வாசிப்பதில் தன் ஆளுமையின் மீதான இறுமாப்பு,நாயகியின் பால் தனக்கு ஏற்படும் கிளர்ச்சியை எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்தக் கூடாது என்று தனக்குத் தானே போட்டுக் கொண்ட தடையையும் மீறி தறி கேட்டு ஓடி அவன் உள்ளக் கிடக்கையை வெளிச்சம் போட்டு பறை சாற்றும் முக பாவனைகள்..'மறைந்திருந்தே பார்க்கும் மருமம் என்ன என்று அவள் கேட்கும்போது தன குட்டு இப்படி இலகுவாக உடைந்ததே என்று அசடு வழிந்தாலும், அதை மறைத்து ஆச்சர்யம் போல காட்டிக்கொள்ளும் சமாளிப்பு'உன்னை என்னை அல்லால் வேறு யார் அறிவார்?' என்னும் பொழுது அவளுக்கும் தன்  மேல் காதல் என்பதை அவளாகவே உணர்த்துவதை எண்ணி உவகையும் கர்வமும் பொங்குகிறது.பாடலின் refrain ஆக 'நாயகா,ஷண்முகா!' என்று கடவுளின் நாமத்தை chant செய்யும் பாவனையில் உள்ளம் கவர்ந்த காதலனை அவன் பெயர் சொல்லி அழைக்கும் நாயகியின் குறும்பும்,அந்த உரிமையும் துணிச்சலும் கலந்த பாவனையை ரசிக்கும் அதே நேரம் he lets it slip that she caught him unawares with such daring address in public ,almost announcing their romance openly . ஈர்ப்பு, உவகை, கர்வம், ரசிப்பு,இனிமையான அதிர்ச்சி என்று பல பாவங்களையும் வெறும் கண் பார்வையாலும் உதட்டுச் சுழிப்பாலும் மட்டுமே உணர்த்த சிவாஜி கணேசன் என்கிற கலைஞன் ஒருவனால் மட்டுமே சாத்தியம்.


உயிரோட்டம் நிறைந்த கதா பாத்திரங்களுக்கு பத்மினியும் சிவாஜியும் தம் திறமையால் மெருகு சேர்த்திருப்பார்கள்.  அப்படி இப்படி என்று கொஞ்சம் மிகைப் படுத்தினாலும் ரசிக்க வேண்டிய காதல், விரசம் என்று  மலிவாகி விடக் கூடிய அபாயம் உள்ளடங்கிய நிலை.அவ்வளவு கச்சிதமாய் tight rope walk போல், ஆனால் அவ்வளவு இயல்பாக நடித்திருப்பார்கள். என்னமோ chemistry ,chemistry என்று சொல்கிறார்களே, அதற்க்கு classic example இதோ இங்கே,இதோ இங்கே..அஹாஹஹஹா..

இப்பொழுது உப நடிகர்களின் contribution க்கு வருவோம்..

பார்வையாளர்கள் மத்தியில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த கலா ரசிகராய் நாகையா,ஆடலை ரசிக்காமல் ஆடல் அணங்கை ரசிக்கும் காமுகனாய் நாக லிங்கம் ..பின்னால் இவனால் தொல்லை வரும் என்று சூசனை நமக்கு வருகிறது.

நட்டுவாங்கம் செய்யும் தங்கவேலு தன் சொல்லுக்கட்டிலும்,மிருதங்கம் வாசிப்பவர் தன் தாளக்கட்டிலும் லயித்துபோய் ஒருவரோடு ஒருவர்  தலை முட்டிகொள்ளும் ஹாஸ்யம் யதார்த்தமாய் இருக்கும். 
........

Vadivu, mother of the dancer , has grand plans for her daughter. She smells a rat when Mohana sings 'நாதத்திலே தலைவன் குழல் கேட்டு அந்த நாதத்திலே என்னை நான் மறந்தேன்..' and lets her suspicion show We understand she is not at all in favour of the budding romance .

பாலையா as the tavil player ..ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது என்பது போல தவில் வாசித்த விரல்களும்  என்று  சொல்லத் தோணும் காட்சி..  

Manorama as a tamasha artist watches the show from the sidelines .She is not in the same league as Mohana and her regular slot in the programme has been given to Mohana. Yet there's no rancour as she enjoys Mohana's talent on display as a true rasika.

And the attention to little details.- Vadivu keeping  a hawk eye on the sollukkattu and taalakkattu right till the very last second---கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில்  பாட்டின் முடிவில் வரும் தாளக்கட்டுக்கு ரசிகர்கள் நாம் தொடையில் தாளம் போடாமல்,முகத்துக்கு நேராக விரல்களை மடக்கி முத்தாய்ப்பாக வீசுவது போல் .



கதையின் plot ஐயும் characters ஐயும் 4 நிமிடங்களுக்குள் தொய்வில்லாமல் establish செய்யும் இந்த ஆடல் காட்சியின் மிகச் சிறந்த அம்சம் என்னவென்றால்,...நாயகனின் பெயரையும் நாயகியையும் (அவனுக்கு பிரியமானவள் என்பதால்) இணைத்தால் வரும் ஷண்முகப்ரியா ராகத்தில் பாடல் அமைந்ததுதான்!எவ்வளவு தூரம் மெனக்கட்டு இருக்க வேண்டும் இப்படி ஒரு பாடலையும் ஆடல் காட்சியையும் அமைக்க!அருமை, அருமை, அருமையோ அருமை...

ரசனை என்னும் kaleidoscope

ஞாபக மறதியைத் தோற்கடிக்க வழக்கமாக நான் செய்யும் brain exerciseல் இன்றைய theme -recollect as many tamil songs as I could about 'வாழ்க்கை'. 24/7 365 நாட்களும் sponsors இல்லாமலே மனதில் ஓடிக்கொண்டிருக்கும் FM அலை வரிசையில் முட்டி மோதாத குறையாய் வந்து விழுகின்றன..

வாழ்க்கை என்பது வியாபாரம்...
வாழ்வே மாயம்..
வாழ்க்கை வாழ்வதற்கே..
விடுகதையா இந்த வாழ்க்கை..
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்..
ஒரு மனிதன் வாழ்வே இனிமை என்றான்..

என்னைப் பொருத்தவரை 'வாழ்வது' என்றால் 'ரசிப்பது'..ரசனை என்ற ஒரு விஷயம் இல்லாமல் போயிருந்தால் நான் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேனா என்றே சந்தேகம் வந்திருக்கும்.

இன்று வரை ஒரு கோழியையோ சேவலையோ தெருவில் காணாத இந்த ஊரில் என் விடியல்கள் என்னவோ குயிலின் ஓசையோடுதான். 'A nightingale that all day long ,cheered the village with its song' என்று படித்தபோது nightingale nightல் மட்டும் அல்லவா பாடணும்  என்று வாதம் செய்வோம். என் வீட்டு ஜன்னல் அருகில் அமர்ந்து எப்பொழுது மொபைல் போனில் பேசினாலும் கட்டாயமாய் தோழி கேட்பாள், 'எங்கே பார்க்லயா உட்கார்ந்துண்டு இருக்கே,குயில் கூவற சத்தம் கேக்கறதே?' என்று. வீட்டின் எல்லா  ஜன்னல்களின்  வழியாகவும் தலை அசைத்து குசலம் விசாரிக்கும் Gulmohar  மரங்களுக்கு என் ஆறு கால வணக்கங்கள்...

'குயில் கூவி துயில் எழுப்ப..கொடியரும்பு கண் விழிப்ப ..' எனக்காகவே இயற்றிய பாடல்தானோ?

உங்களுக்குத் தெரியுமா.. ஒவ்வொரு காலையும் சாப்பிட அடம் பிடிக்கும் என் குழந்தைக்கு போக்கு காட்டவென்றே சொல்லி வைத்தாற்போல் தலை போகிற அவசரத்துடன் எதிர்த்த கட்டிடத்தில் இருந்து என் மொட்டை மாடிக்கு போகும் TV கேபிள் ஒயர் மேல் விறு விறு என்று தாவி வரும் இந்த அணில் குட்டியை..?

ஒரு இடத்தில் நிற்காமல் தலை வார,சாப்பிட, home work செய்ய,தூங்க வைக்க என்று என்னை வீடு முழுதும் அலைக்கழித்த செல்ல மகள், maternity wardக்கு வெளியே குறுக்கும் நெடுக்கும் நடை போடும் கணவனின் தவிப்புடன் ஜன்னலோரமே கதி என்று ஒரு தவம் போல் கிடந்தாள்--கீழ் வீட்டு ஜன்னலின் sun shadeல் ஒரு pigeon கூடு கட்டி முட்டையை அடை காத்தபோது. முட்டை பொரிந்து வெளி வந்த அந்த குஞ்சு அறியுமோ சேர்ந்து அடை காத்த என் மகளின் கதகதப்பை..?

வார்த்தையில் சொல்லி மாளாத எத்தனை விஷயங்கள் என் வாழ்வில் ரசிப்பதற்கு..?