ஞாபக மறதியைத் தோற்கடிக்க வழக்கமாக நான் செய்யும் brain exerciseல் இன்றைய theme -recollect as many tamil songs as I could about 'வாழ்க்கை'. 24/7 365 நாட்களும் sponsors இல்லாமலே மனதில் ஓடிக்கொண்டிருக்கும் FM அலை வரிசையில் முட்டி மோதாத குறையாய் வந்து விழுகின்றன..
வாழ்க்கை என்பது வியாபாரம்...
வாழ்வே மாயம்..
வாழ்க்கை வாழ்வதற்கே..
விடுகதையா இந்த வாழ்க்கை..
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்..
ஒரு மனிதன் வாழ்வே இனிமை என்றான்..
என்னைப் பொருத்தவரை 'வாழ்வது' என்றால் 'ரசிப்பது'..ரசனை என்ற ஒரு விஷயம் இல்லாமல் போயிருந்தால் நான் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேனா என்றே சந்தேகம் வந்திருக்கும்.
இன்று வரை ஒரு கோழியையோ சேவலையோ தெருவில் காணாத இந்த ஊரில் என் விடியல்கள் என்னவோ குயிலின் ஓசையோடுதான். 'A nightingale that all day long ,cheered the village with its song' என்று படித்தபோது nightingale nightல் மட்டும் அல்லவா பாடணும் என்று வாதம் செய்வோம். என் வீட்டு ஜன்னல் அருகில் அமர்ந்து எப்பொழுது மொபைல் போனில் பேசினாலும் கட்டாயமாய் தோழி கேட்பாள், 'எங்கே பார்க்லயா உட்கார்ந்துண்டு இருக்கே,குயில் கூவற சத்தம் கேக்கறதே?' என்று. வீட்டின் எல்லா ஜன்னல்களின் வழியாகவும் தலை அசைத்து குசலம் விசாரிக்கும் Gulmohar மரங்களுக்கு என் ஆறு கால வணக்கங்கள்...
'குயில் கூவி துயில் எழுப்ப..கொடியரும்பு கண் விழிப்ப ..' எனக்காகவே இயற்றிய பாடல்தானோ?
உங்களுக்குத் தெரியுமா.. ஒவ்வொரு காலையும் சாப்பிட அடம் பிடிக்கும் என் குழந்தைக்கு போக்கு காட்டவென்றே சொல்லி வைத்தாற்போல் தலை போகிற அவசரத்துடன் எதிர்த்த கட்டிடத்தில் இருந்து என் மொட்டை மாடிக்கு போகும் TV கேபிள் ஒயர் மேல் விறு விறு என்று தாவி வரும் இந்த அணில் குட்டியை..?
ஒரு இடத்தில் நிற்காமல் தலை வார,சாப்பிட, home work செய்ய,தூங்க வைக்க என்று என்னை வீடு முழுதும் அலைக்கழித்த செல்ல மகள், maternity wardக்கு வெளியே குறுக்கும் நெடுக்கும் நடை போடும் கணவனின் தவிப்புடன் ஜன்னலோரமே கதி என்று ஒரு தவம் போல் கிடந்தாள்--கீழ் வீட்டு ஜன்னலின் sun shadeல் ஒரு pigeon கூடு கட்டி முட்டையை அடை காத்தபோது. முட்டை பொரிந்து வெளி வந்த அந்த குஞ்சு அறியுமோ சேர்ந்து அடை காத்த என் மகளின் கதகதப்பை..?
வார்த்தையில் சொல்லி மாளாத எத்தனை விஷயங்கள் என் வாழ்வில் ரசிப்பதற்கு..?
Adada! Enna karpanai! All the similes used are so typical of you. I especially enjoyed'the anilkutti'. Eppadi ippadi yosikkirae, Shambavi?
ReplyDeleteViji,
ReplyDeleteFantastic! I enjoyed your Rasanai and the humourous way in which you have narrated the mundane things that happen around you. Unless one has a poet in him or her, will just not bother to even to look or hear such beautiful things.You are a true nature lover!
Keep it up.
Bhuvana