Tuesday, August 19, 2014

Nothing Revolutionary about this Revolution 2020

Chetan Bhagat's 'Revolution 2020' didn't offer anything close to being revolutionary to me. Yet I must concede that I could relate to some of the matter of fact utterances about mundane matters which tho' I hate to admit, have stayed with me..So here goes Chetan Bhagat from Revolution 2020-

felt like a beggar hanging out with kings (about spending time  after a  poor show in AIEEE with Raghav ,a topper in AIEEE and his dad)

managing parental expectations is harder than AIEEE entrance exams.

Girls are best topic-changers.

When you are a repeater, even tobacco-chewing watchman can make you feel small.

(showing the room)" It's good for studying" said the watchman who probably hadn't studied even a single day in his life.

Students and teachers strode about in a purposeful manner as if they were going to launch satellites in space.

"I am an ex-Bansalite". Is there anyone in Kota who isn't?

Losers, even if they don't have a brain, have a heart.

Riddhi Siddhi Technical College. Quite a backward name,no? So we say RSTC, sounds cooler.

Stupid people go to colleges. Smart people own them.

Politician, Businessman, Educationist- Power, Money, Respect.

Monday, August 11, 2014

பொக்கிஷம் - பாகம் 2

BA படித்த பொழுது Milton 's Paradise Lost ல் ஒரு scene ல் Satan and Mammon இருவருக்கும் இடையே அபிப்பிராய பேதம் வரும். அந்த scene ஐ  விவரிக்கச் சொல்லி பரீட்சையில் கேள்வி வந்தபோது, அவர்கள் இருவரின் வாதத்தையும் பொன்னியின் செல்வனில் பெரிய பழுவேட்டரையர்க்கும் சிறிய பழுவேட்டரையர்க்கும் இடையே நந்தினியின் காரணத்தால் வரும் மோதலுடன் ஒப்பிட்டு எழுதப் போய் , lecturer இடம் வாங்கிக் கட்டிக் கொண்டேன். இப்படி செய்யத் தகாதன செய்ததால் மதிப்பெண்கள் குறைந்த போதிலும், லெக்சரரை தடுமாறச் செய்ததில் ஒரு அல்ப திருப்தி

கல்லூரி நாட்களில் தோழிகளுடன் நடந்த அக்கப் போரில் ஒரு விஷயம் சர்வ நிச்சயமாக தெரிந்தது..எங்கள் அனைவருக்கும் மணவாளன் வந்தியத்தேவன் போலவே தான் அமைய வேண்டும் என்று. ( ஏம்மா! பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா..? என்று கௌண்டமணி கேட்டாற்போல்). பெயர் அளவில் கதையின் நாயகன் அருள் மொழி வர்மன் (பின்னாளில் ராஜ ராஜ சோழன்) ஆனபோதிலும், வாசகர்களைப் பொறுத்த வரை கதாநாயகன் வாணர் குல வீரன் வல்லவரையன் வந்தியத்தேவனே. கதையின் ஆதியிலும் அந்தத்திலும் ஐந்து பாகங்களிலும் வியாபித்து , கதையின் எல்லா பாத்திரங்களுடன் தொடர்பு கொண்டு சர்வ வ்யாபியாய் இருப்பவன் அவன் ஒருவனே.

சூடிக் கொடுத்த சுடர்க் கொடி ஆண்டாளைப் பற்றி ஒரு கதை கேள்விப் பட்டிருக்கிறேன். மகள் திருமாலை கணவனாக மனதில் வரித்து இருக்கிறாள் என்று உணர்ந்த அவள் தந்தை பெரியாழ்வார் யோசித்தாராம்....அவன் பல நாமங்கள், பல ஸ்வரூபங்கள் கொண்டவனாயிற்றே ..அவற்றில் எந்த ஸ்வரூபன் மேல் இவள் காதல் கொண்டாள் என்று. பரந்தாமனின் திரு நாமங்கள் ஒவ்வொன்றையும் அவர் சொல்ல சொல்ல, கேட்டுக் கொண்டே வந்த ஆண்டாள் 'ரங்கநாதன்' என்கிற நாமம் கேட்ட மாத்திரத்தில்  முகம் சிவக்கிறாள். தந்தையும் அவள் உள்ளம் கவர் கள்வன் யார் என அறிந்து கொள்கிறார்.

ஆண்டாளின் திருப்பாவை மனப்பாடமாகிப் போன எனக்கு திருமண வயதில் எந்த மாதிரி மாப்பிள்ளை தேட வேண்டும் என்ற பேச்சு எழுந்தபோது   ரகஸிய சினேகிதனாகிப்போனான் வாணர் குல வீரன். தாய் தந்தை முறையாய் தேர்ந்து எடுத்து அழைத்து வந்த தேவனையே வந்தியத்தேவனாய் வரித்து, தர்மம் தவறாமல் இல்லறம் செய்வது வேறு கதை...

ஆபீஸில் உடன் வேலை செய்த ஒரு male colleague தன் திருமணத்திற்கு பெண் தேடி, "கோடிக்கரை பக்கம் போய் அலைந்து  விட்டு வந்தேன் madam , பூங்குழலி போல் ஒருத்தி கண்ணிலே படுவாளா என்று பார்க்க..." என்ற போது  ஆஹா,, என்னைப் போல் ஒரு ரசிகன் என்று மனம் குளிர்ந்தது.

திருமணம் ஆகி பல வருஷங்கள் கழித்து மாமியார் வீட்டில் பழையன கழிதல் நடந்தபோது  புதையல் ஒன்று கண்டெடுத்தேன். தொடர் கதையாய்  வெளி வந்த 'பொன்னியின் செல்வன்' காவியத்தின் ஐந்து பாகங்களின்  தொகுப்பை.
"தாராளமாய் எடுத்துண்டு போயேன்..." என்ற மாமியாரை அப்படியே எகிறி கட்டி அணைத்து முத்தம் கொடுத்தேன். இதை விட பெரிய கொடை வேறென்ன இருக்க முடியும்?

சில வருஷங்களுக்கு முன் நெருங்கிய தோழி ஒருத்தி உடல் உபாதைகளால் தளர்ந்து இருந்த பொழுது உடன் இருந்து ஆறுதல் சொல்ல முடியாத நிலைமை. சமய சஞ்சீவியாக கை கொடுத்தது ஆனந்த விகடன் பிரசுரம் limited edition ஆக வெளியிட்ட hard bound edition of பொன்னியின் செல்வன் with illustrations by  Maniyam from the original  featured in miniature. I could not have given her a better gift that gave  her good company and also  a sense of well being .

என்னுடைய 'bucket list ' ல் முக்கிய அங்கம் 'பொன்னியின் செல்வன் Walk 'கிற்கு உண்டு- தந்தி டிவியில் வரும் ப்ரோக்ராம் 'யாத்ரிகன்' மாதிரி. இதோ கல்கியில் teaser advertorial  பொன்னியின் செல்வன் திரும்பவும் தொடராய் வரப் போகிறது என்பதாய். ஆஹா, யார் படம் வரையப் போறா...? வேறு எந்த கதைக்கும் இந்த கேள்வி உடனே எழும்பாது.ஏனென்றால், பொன்னியின் செல்வன் என்றவுடன் நினைவுக்கு வருவது மணியம் அவர்களின் உயிரோட்டம் நிறைந்த கை வண்ணமே. One cannot speak of one without remembering the other . வினு, மணியம் செல்வன்,பத்ம வாசன், வேதா ...எத்தனை பேர் கை வண்ணத்தில் எத்தனை முறை வந்தாலும் திரும்பத் திரும்ப படித்து திளைக்க வாசகர்கள் தயார் தான். அமரத்துவம் வாய்ந்த இந்த காவியத்தை நினைத்தாலே இனிக்கும்...படிக்கப் படிக்கப் பரவசம்...

P S : இது பொன்னியின் செல்வன் காவியத்தைப் பற்றிய பதிவு அல்ல. அந்தக் காவியம் என் வாழ்வில் பதித்த சுவடுகளின் பதிவு மட்டுமே.

பொக்கிஷம் - பாகம் 1

விடுமுறை நாட்களின் மதிய வேளையில் திடீரென்று என் மூத்த சகோதரிகள் இருவரும் காணாமல் போய் விடுவார்கள். தேடிப் பார்த்தால் ஸ்டோர் ரூமின் தரையில் பாய் விரித்து ஒரே தலையணையில் தலை சாய்த்து தோளோடு தோள் உரசி ஒரு மோன நிலையில் ஒரே புத்தகத்தில் இருவரும் லயித்து இருப்பார்கள். ஒருத்தியின் வலது கையும் மற்றவளின் இடது கையும் நகக் கடிப்பில் engage ஆகி இருக்க ஒரு கை புத்தகத்தை பிடித்திருக்க மற்றொரு கை பக்கங்களை திருப்ப என்று ஜுகல் பந்தி  போல் வாசிப்பு நிகழும். ஒருத்தி படித்து முடிக்கும் வரை   காத்திருந்து பின் தான் படிக்கலாம் என்று விட்டுக் கொடுக்கும் மன நிலையில் இருவருமே இருந்தது இல்லை.

மழை வெளுத்துக் கட்டும் நாட்களில் வெளியே விளையாட முடியாமல் வீட்டுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் வேளைகளில் ஸ்வாரஸ்யமான ஒரு வினாடி வினா எங்களுக்குள் நடக்கும். ஒரு அத்தியாயத்திற்கு வரைந்திருக்கும் illustration ஐ மட்டும் பார்த்து அந்த அத்தியாயத்தின் தலைப்பு என்ன? என்று ஊகித்து சொல்ல வேண்டும். அதில் எப்பொழுதும் fair and square ஆக எங்களை தோற்கடித்தது என் அண்ணன்தான். அப்படி ஒரு elephantine memory அவனுக்கு அந்த ஒரு விஷயத்தில் மட்டும்.

" யாரைக் கேட்டுண்டு இப்படி பண்ணினே? ஒரு வார்த்தை just ஒரு வார்த்தை என்கிட்டே சொல்லி இருந்தா நான் வந்து எடுத்துண்டு போய் இருப்பேனே.....அது என்ன கேட்டது காசா பணமா..?", கோபமாய் கத்தினாலும் அழுகையில் முடிந்தது என் ஆற்றாமை. Family heirloom மாதிரியான ஒரு பொக்கிஷத்தை பழைய பேப்பர் காரனுக்கு எடைக்குப் போட இவனுக்கு எப்படி மனசு வந்தது..? இத்தனைக்கும் எங்கள் எல்லாரையும் விட அதை இவன்தானே விழுந்து விழுந்து மனப் பாடம் செய்தான்...அடக்க முடியாமல் புலம்பிய என் மேல் பரிதாபப் பட்டு அவன் குட்டை போட்டு உடைத்தாள்  புதிதாய் திருமணம் ஆகி வந்திருந்த அவன் மனைவி, என் மன்னி.
" அவர் சும்மா உங்களை சீண்டி பார்க்கிறார்......எல்லாம் பத்திரமாய் பரணை  மேலே பழைய trunk பொட்டியிலே இருக்கு. அதுக்கு இடம் வேணும்னே அம்மாவோட பித்தளை வெண்கல பானை,வாணலி எல்லாத்தையும் தூக்கி எடைக்குப் போட்டுட்டார் தெரியுமா..."

அப்பாடி, போன உயிர் திரும்பி வந்தது. சின்ன வயசிலே இருந்து என்னை சீண்டி அழ விட்டு வேடிக்கை பார்த்து  அப்புறம் நிதானமாய் சமாதானம் செய்வது பழகின சமாச்சாரம் தான் என்றாலும் இப்படியா என் வீக் பாயிண்ட் பார்த்து அடிப்பான் ஒருத்தன்....இருக்கட்டும்...அழுது ஆகாத்தியம் பண்ணி பொறந்தாத்து சீதனமாய்  ஒரு நாள் பிடுங்கிண்டு போகலே...என் பேரு ​​​​ ____ இல்ல...அடடா என்னதான் அந்த பூர்வீக சொத்து என்கிறீர்களா...கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' என்கிற சரித்திரக் காவியம்தான் அது.

Saturday, August 9, 2014

Home Sweet Home

Wanna own a villa by the Spanish countryside? Or a cozy castle in the Scottish highlands? That too in amchi Pune! Absolutely believable ..ahem...at least in name...


Thursday, August 7, 2014

Chetan Bhagat- India's Biggest Story Teller?

The book may be titled 'Half Girlfriend' but had a full front page ad in TOI from Flipcart. No half measures in promotion there, you see? Looks like the IIT/IIM alumnus has gradually become the messiah of the Indian middle class youth ,going by the theme of his novels.


One thing you have to hand to him is that he has not vanished into oblivion as many of his ilk have- after hitting the jackpot at the very first draw.Instead, he has churned out regular fare ever since, keeping of course his and the publishers tills ringing. I know of folks who proudly 'claim' to have read 'all' of Chetan Bhagat in the same way school kids declare to have read the entire Harry Potter series.I also know of GD/PI trainers advising students to read up at least one book of CB just so they can confidently state book-reading as one of their hobbies and sound profound ( yet not come across as too erudite that the interviewer feels inadequate and wreaks vengeance with poor grades).

The writing per se may not deserve the hype surrounding him. But sample these- 4 out of the 5 published works have already been made into movies.Two featuring two of the Khan triumvirate, one of which a benchmark for box office;the third one launching the cine career of three new comers and yet another featuring the current matinee  heart throbs and the last one on the floors already. Now how many of the current crop of fiction writers can match or challenge that? Before you brush him aside in a hurry as relevant only to the middle class youth with their existential angst in education, employment, romance..remember, he gets to be a panelist on prime time TV talk shows  and shares his two cents on a popular national daily as well. PR on overdrive may be..?

Make no mistake, CB is the equivalent of vanilla ice cream to book reading indians- nothing exotic or special, no pretext of high brow ideology, not at all pricy, light on the mind and the pocket. Nothing more ,nothing less.

Tuesday, August 5, 2014

Partition Pathos

I came across news of this book launch recently. The book is " The Making Of Exile" by Nandita Bhavnani. It's about the repercussions faced by Sindhis after partition. 

I too felt we always focus on Hindus and Muslims whenever we speak of the aftermath of the Partition. What about Sindhis and Parsis?

One line in the news about the book launch that set me thinking-'the loss that Sindhis suffered was not only of home as a territory, but home as lifestyle and culture'. How much it must have hurt, to give up and change one's habits of dressing, food and everyday language utterances, just to 'blend' with the alien land and its hostile people
I plan to read thru' the book soon.

Friday, August 1, 2014

பாட்டு பாடவா‏

கேபிள் டிவியில் channel லுக்கு ஒன்றாய் சினிமா பாட்டுப் போட்டிகள்.தமிழ் சேனல்கள்தான் என்றாலும், பாடுவது தமிழ் பாடல்கள்தான் என்றாலும் நிகழ்ச்சியின் பெயர் என்னவோ ஆங்கிலத்தில்தான்-சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர், சன் சிங்கர், ஐடல் இத்யாதி..சினிமாவில் பாட சான்ஸ் கிடைத்ததோ இல்லையோ, ஜட்ஜ் சீட்டில் அமர சில பேருக்கு சான்ஸ் இருக்கத்தான் செய்கிறது.
மலையாளமும், தெலுங்கும் தாய் மொழியாக இருந்தாலும்,அக்ஷர சுத்தமாகப் பாடும் போட்டியாளர்கள். படித்தவனோ பாமரனோ,அனுபவித்து பாடும் போட்டியாளர்கள்.Amazing array of talent on display .

Fy ,fy ,fy ,கலக்கி fy ,சொதப்பி fy /daddy mummy வீட்டில் இல்ல/அட்றாரா நாக்க முக்க -போன்ற கருத்துச் செறிவு நிறைந்த தேனொழுகும் பாடல்களுக்கு நடுவே  danger zone ல்   hit  or  miss situation ல் , ஆதிமூலமே! என்று கஜேந்திரன் அறை  கூவல் விடுத்த கதையாய் , 'மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி' என்று ஹிந்தோளத்தையும் 'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது' என்று ஆஹிர் பைரவியையும் துணைக்கு அழைக்கும் பொழுது போன தெம்பு திரும்பி வரத்தான் செய்கிறது- ரசனை இன்னும் அதள பாதாளத்திற்கு போகவில்லை, still there is redemption என்று.

P S: Jay corrects me and I stand corrected- It's raag Chandrakauns and not Hindolam.