ஆச்சு இதோ இதோ என்று 2 வாரம் ஓடியே போயாச்சு . தானா பாதி தெய்வமா பாதி
என்கிறாப்போல ‘no entry ‘ யில் scooty ஐ ஓட்டப்போய் காலில் எலும்பை
முறிச்சிண்டு .
ஆச்சு , childrens ‘ ரூமில் double bed ஐ monopolize செய்தாயிற்று .
கைக்கெட்டின தூரத்தில் walker ,ரேடியோ, ointment , books , medicines,
mobile phone, நெல்லிக்காய் மொரப்பா, குடிக்க தண்ணீர் என்று கடை
பரப்பியாச்சு.அப்பப்போ கட்டு போட்ட கால் விரல்களை முன்னும் பின்னும்
ஆட்டுவது தவிர வேறு வேலை வெட்டி எதுவும் இல்லை.எத்தனை நேரம்தான் விவித்
பாரதியில் பாட்டு கேட்பது , இல்லை புஸ்தகம் படிக்கறது?பசங்கள் அறையை
ஆக்ரமம் செய்ததில் பெரிய சந்தோஷம் என்னன்னா படுக்கைக்கு எதிரே இருக்கற pin
up board ல் இருக்கும் photos ஐ பார்த்து அசை போடறதுதான் .பொழுதுக்கும்
yaadon ki baaraat தான் .
இதோ Lavan 3 வயது போல் இருக்கறப்போ எடுத்தது ..வீட்டு ஹாலில்
permanant fixture ஆன bharatiya bhaitak -6 inch thick coir mattress with
cushions and bolsters in earthy colours and ethnic designs – patch
work , mirror work ,batik print , the works ..She is posing in a
yellow T shirt with no 4 printed on it(tho’ she’s not there yet) with
her hands on her hips. She would roll on the bed and hide behind the
cushions while playing ‘லாவண் எங்கே.. , இத்தோ’. Once when she buried her
face in the cushion, she forgot all about the game and let out ‘ஹா !
அப்பா வாசனை !’
and hugged the cushion tightly. Chandru used to tour a lot those
days and we would miss him badly so the cushion with ‘அப்பா வாசனை ‘
became an apology of a stand -in .
இப்படி மூச்சால் நுகர்ந்த வாசனைகள்தான் எத்தனை? வெறும் வாசனையாக
மட்டும் இல்லாமல் வாழ்வின் ஏடுகளில் பதிந்து போன சம்பவங்களும்தான் எத்தனை?
சமஸ்க்ருதத்தில் ‘vaasana ‘
என்பதும் ஆங்கிலத்தில் Proust Phenomenon என்பதும் இதுவேதானோ ?
They say olfactory sense is the strongest and the longest lasting
of all sensory impressions. The earliest smell I can recall now is an
ode to my childhood memories. I was in my 3rd standard in Christ king
Middle School,Tambaram railway colony. Come lunch time, the aroma of
chettinad spices will come wafting into the class room, rousing my
hunger pangs. How much I longed to join the queue with an aluminium
plate for the mid day meals served at school! That was not for the
privileged class, i was told. The child in me couldn’t quite understand
or accept the denial of what I felt was a privilege.இது நடந்ததோ என்
எட்டாவது வயதில். பின்னர் ஒரு நாள் மகாபாரத கதையில் ‘அக்ஷய பாத்ரம் ‘ என்று
கேள்விப்பட்டபோது என் மனத்திரையில் விரிஞ்ச image தங்கத் தாம்பாளமோ வெள்ளி
பேலாவோ இல்லை…இங்கும் அங்கும் நசிந்து போன ஒரு அலுமியத் தட்டுதான்….அதன்
பின் இன்று வரை,பல முறை அதே spicy smell ஐ சுவாசித்திருக்கேன் – not so
privileged இல்லங்களை கடந்து போகும் சில சமயங்களில். All I could do was
inhale a lungful and let out a sigh .
என் மகள் தலையணையில் முகம் புதைத்தது போல் நானும் கிறங்கிப் போன
தருணங்களும் உண்டு.கோடை விடுமுறை முடிந்து பள்ளியில் புது வருஷம் துவங்கும்
முன்,புது பாட புஸ்தகங்களுக்கான anticipation தீபாவளி பட்டாசுகளுக்குக்
கூட இருந்ததில்லை என் வரையில்.ஒவ்வொரு புஸ்தகமாய் திறந்து அதன் பக்கங்களில்
முகம் புதைத்து, paper , glue ,fresh print ink சேர்ந்த ஒரு heady
cocktail of smellsஐ என் நாசித் துவாரங்களில் நான் நுகர்ந்த சுகம்,
இன்றும் அலட்சியமாய் card swipe செய்து Crossword இலும் Landmark இலும்
flipcart மூலமாவும் வாங்கும் best sellers களிலும் என்னை முகம் புதைக்க
வைக்கிறது.
இதோ 4 மாதக் குழந்தையாய் Sukan – கவிழ்ந்து படுத்துக்கொண்டு , தூக்க
மாட்டாமல் குண்டு மூஞ்சியைத் தூக்கி கழுத்தைத் திருப்பி காமெராவின்
பின்னால் இருக்கும் என்னைப் பார்த்து முகம் மலர சிரிக்கிறாள் .அந்த
கழுத்தில்தான் என்ன ஒரு ‘பாப்பா வாசனை’? பிறந்து சில வாரங்களே ஆன புத்தம்
புதிய என் கண்ணம்மாவின் கழுத்துப் பக்கத்திற்கே என்று ஒரு பிரத்யேக
வாசனை-பச்சைக் குழந்தையின் own signature fragrance …இழுக்க இழுக்க இன்பம்
இறுதி வரை…
5 வயதில் இருந்து 50 வயது வரை நானும் பல brands use செய்தாயிற்று -Lux
, ஆண்டாண்டு காலமாய் the beauty secret of filmstars ;Liril ,Dove ,Mysore
Sandal , Pears, Nivea என்று.ஆனால் என் குளியலறையில் நீ lux ஆ Liril ஆ
என்றால்,இரண்டும் இல்லை,என்னுடைய choice Hamam சோப்பிற்கே என்றுதான் சொல்ல
வேண்டும்.அய்ய ,என்ன இன்னும் பழச கட்டிண்டு அழறேன் என்று தோணலாம்
.மன்னிம்மாவின் பெங்களூர் சேஷாத்ரிபுரம் ‘அயோத்யா’ வீட்டின் பின்கட்டில்
அதிக வெளிச்சமில்லாத பாத்ரூமில் யாராவது குளிச்சு விட்டு வெளியில்
வந்தவுடன் உள்ளே நுழைந்தால்,பாய்லரில் கொதிக்கும் வெந்நீரின் ஆவியும்,
தரையின் ஈரமும், முன்னாடி குளித்தவர் lather வர தேய்த்துக்கொண்ட Hamam
சோப்பின் lingering வாசனையும் சேர்ந்த சுகானுபவந்தான் இந்த 50 வருஷ brand
loyaltyயின் ஆதாரம் என்று சொன்னால் Brand Management ல் MBA செஞ்ச எந்த
கொம்பனானாலும் நம்பித்தான் ஆக வேண்டும்.ஏன்னா, இது உண்மையைத் தவிர
வேறில்லை.
அப்புறம்,AC ரூமில் மல்லிகையின் floral மணம் ,whiff of Denim after
shave இன் musk மணம் ,sandalwood அகர்பத்தியின் தெய்வீக மணம் , முதல்
மழையின் ஈர மண் வாசம்,புத்தம் புது nylon eraser இன் pleasant scent
(அப்பப்பா,தலையில் வழியும் எண்ணெய்யில் அதைத் தேய்த்து அதை பேப்பரில்
அழுத்தி அதில் இருக்கும் கார்ட்டூன் படத்தை trace செய்கிறேன் என்று
பின்னாலேயே அலையும் கிராதகக் கூட்டத்தில் இருந்து அந்த eraser ஐக்
காப்பாற்ற நான் பட்ட பாடு ஒரு ‘the white balloon ‘க்கோ ஒரு ‘Children of
Heaven ‘க்கோ கொஞ்சமும் கொறஞ்சது இல்ல),East Tambaram Jaya Coffee ஸ்டோரின்
strong aroma of Plantation and Peabury mix coffee powder என்று தினசரி
வாழ்க்கையில் கூடவே தவழ்ந்து வரும் மணங்களும் அந்த மணங்கள் கமழும்
நினைவுகளும்தான் எத்தனை எத்தனை?
இதோ,எங்கே எங்கே என்று என்னைத் தேடி சமையல் அறையிலிருந்து கிளம்பி
வருகிறதே கிள்ளிப் போட்ட கறுவேப்பிலையும் பொடித்துப் போட்ட பெருங்காயமும்
சேர்ந்து கொதிக்கும் தக்காளி ரச வாசனை…அம்மாவுக்கு உடனே போன் செய்து சொல்ல
வேண்டும் , மன்னிம்மாவின் கை மணம் patent rights violation எதுவுமில்லாமல்
கொள்ளுப் பாட்டியின் சீதனமாய் என் பெண்ணிற்கு அப்படியே வந்து சேர்ந்து
இருக்கு என்று.இப்படி ‘மன்னிம்மா ரசம் ‘ என் பெண்ணின் கையால் சாப்பிட நான்
நன்றி சொல்வேன் என் fracture க்கு…
nalla vasanaiyodu ezhudhiyirukkum unakku en parattukkal. yes, you have used various types of fragrance very aptly and the taminglish is supero super.... will read other blogs of yours and comment...27.05.2017
ReplyDelete