Friday, July 11, 2014

பெரிமூச்சு பெரியம்மா - Part 1

அடை மொழியை பார்த்து இவருக்கு ஆஸ்த்மா என்று நினைக்காதீர்கள்.டாக்டர் கூட இவரைப் பரிசோதனை செய்யும்போது மட்டும்இழுத்து மூச்சு விடுங்கள் என்று சொல்ல மாட்டார்.ஏனென்றால் சாதாரணமாய் மூச்சு விடுவதே பெருமூச்சாதான் இருக்கும்.வார்த்தைக்கு வார்த்தை  'ம்ஹூம்என்று அங்கலாய்ப்பு வேறு இருக்கும்.
பாவம் பெரியம்மாக்கு குழந்தைகள் இல்லாவிட்டால் என்னநாம் இல்லையா என்று தன வீட்டுக்கு வந்து ஒரு மாசமாவது தங்கி விட்டுப் போகணும் என்று ஆசையாய் வந்து கூட்டிப் போனாள் தங்கை பெண் சுஜி என்கிற சுஜாதா.வராத பெரியம்மா வந்திருக்காநாம் அவருடன் நெறைய நேரம் செலவழிக்கணும் அவருக்கு போர் அடிக்காமல் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று தன்னுடையroutine வேலைகளை எல்லாம் re schedule செய்தாள்.ஒரே வேளையாய் இரவுக்கும் சேர்த்து காலையிலேயே சமையலை முடித்தாள்குழந்தைகளுக்கு மாலை நேரம் dry snacksதான் என்று முன் கூட்டியே பிஸ்கட்,கேக் என்று stock செய்தாள் பெரியம்மா திரும்பி போகும் வரை home workஐ தாங்களே without help செய்ய வேண்டும் என்று 11th commandmentஐ அமலாக்கினாள்; 2 நாளைக்கு ஒரு தடவைதான் என்று வாஷிங் மெஷினுக்கு alternate days rest கொடுத்தாள். மொத்தத்தில்தன் வேலைகளை குறைத்துக் கொண்டு பெரியம்மாவின் stay சௌக்கியமாக இருக்க வேண்டும் என்று முனைப்பாக இருந்தாள்.வருடமாய் அதே ஊரில் இருந்தும் பார்த்தே இருந்திராத கோவில்,fort,புடவைக் கடை என்று பெரியம்மாவுடன் இவள் அலைந்த அலைச்சலைப் பார்த்து அவள் கண்ணாளன் சொந்த வீட்டிலேயே paying guest போல்  ஒடுங்கிப் போனான்.
'அந்த நாளும் வந்திடாதோஎன்று எதிர் பார்த்த பெரியம்மா ஊருக்கு கிளம்பும் நாளும் வந்தது.'என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கள்என்று காலில் விழுந்து எழுந்தாள்  சுஜி ." என்னமோடிம்மாஎன்னாலே சொல்லாம இருக்க முடியலே..நீ சரியாவே குடும்பத்தை கவனிக்கறது இல்ல..பசங்களுக்கு வேளா வேளைக்கு சத்தாவாய்க்கு ருசியா சமைக்க மாட்டியோ?வேலைக்கு போகாமே வீட்டுல தான இருக்கே.படிக்கற பசங்களோட கூட ஒக்காந்தாதானே நன்னா படிக்கும்.நீ என்னடான்னா அதுங்கள அம்போன்னு வுட்டுட்டு என்னோட ஊர் சுத்தறதுலேயே குறியா நிக்கற..மெஷின் தானே தோய்க்கறது பின்னே ஏன் மலையாட்டமா துணிய சேர்த்து வெக்கற?மாப்பிள்ளை பாவம் வாயில்லாப் பூச்சி..அவரையாவது கொஞ்சம் கவனிச்சியான்னா அதுவும் இல்ல..ம்ஹூம்..என்னவோ போ.." பெரியம்மா பெருமூச்சு பெரியம்மா அவதாரம் எடுத்த அதே நேரம் சுஜி ஷாக் சுஜியாக ஸ்தம்பித்து  இருந்தாள் 

1 comment:

  1. விஜி, it's so true......இந்த மாதிரி நம்ப வித்யாசமா நடந்துண்டா, இப்டித் தான் முடியும்.எப்பவோ, வராதவா வந்து இருக்கான்னு once in blue moon பண்ணினால், தும்பையை விட்டு வாலைப் பிடிச்சுடுவா.

    -- என்னமோடி யம்மா நீ பெருமூச்சு பெரியம்மாவப் பத்தி எழுதினதப் படிக்கவே பெருமூச்சு வாங்கித்து, கடசிலப் பாத்தா, மூச்சை எங்கேயோ இழுத்து வுட்டுட்டே! எலாஸ்டிக் மாதிரி மூஞ்சுல அடிசுடுத்து!

    ReplyDelete